பிக் பாஸ் 7: என்ட்ரியானதும் பிக்பாஸுக்கு மொக்கை கொடுத்து கேப்டனான கூல் சுரேஷ்..சொன்ன வார்த்தை ஹைலைட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சில மணி நேரத்திற்கு முன்புதான் ஆரம்பமானது.
அதில் முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

அவர் வீட்டிற்குள் வந்ததுமே பிக் பாஸை மொக்கையாக்கி இந்த வாரத்தின் முதல் கேப்டனாக ஆகி இருக்கிறார். இந்த நிலையில் உள்ளே நடந்த நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம்.
அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார். அதில் முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் அறிமுகம் ஆகி இருக்கிறார். அறிமுகமாகும் போது அவருடைய அலப்பறையை தொடங்கி விட்டார்.

சில நிமிடங்கள் மட்டுமே மேடையில் கூல் சுரேஷ் நடிகர் கமல்ஹாசன் முன்பு பேசிவிட்டு பிறகு அவருடைய அறிமுக வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடிகர்கள் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக அனுப்பி வைக்கப்பட்டார். உள்ளே சென்றதுமே சுரேஷ் தன்னுடைய வழக்கமான அலப்பறையை தொடங்கி இருக்கிறார்.
வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த கூல் சுரேஷ் பிக்பாஸ் கன்ஸ்சக்சன் ரூமுக்கு கூப்பிட, அது என்னவென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு பிக் பாஸ் வழியை சொல்லி கன்செக்ஷன் ரூமிற்குள் வர வைக்கப்பட்டார். பிறகு அவரிடம் பிக்பாஸ் நீங்கள்தான் முதல்முறையாக இந்த வீட்டிற்குள் வந்து கன்ஸ்ட்ரக்ஷன் ரூமில் உட்கார்ந்து இருக்கிறீர்கள்.

உங்களுக்கு ஏதாவது பதட்டம் இருக்கிறதா? என்று கேட்க, அதற்கு கூல் சுரேஷ் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லையே என்று மொக்கை கொடுக்க, ஆனாலும் அசராத பிக் பாஸ் இல்லை இதற்கு முன்பு சீசன்களில் உள்ள போட்டியாளர்கள் பிக் பாஸ் உள்ளே வந்து கன்ஸ்ட்ரக்ஷன் ரூமில் இருக்கும் போது பதட்டப்படுவார்கள் என்று சொல்ல, அப்படியா என்று கூலாகவே கூல் சுரேஷ் கேட்க அதைத்தொடர்ந்து நீங்க தான் இந்த சீசனின் முதல் வாரத்தில் முதல் கேப்டன் என்று பிக் பாஸ் சொன்னதையும் அப்படியா? என்று அதையும் அசட்டையாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கூடவே பிக் பாஸ் உங்கள் அருகில் இருக்கும் பேண்டை எடுத்து கையில் மாட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு அதிகமான உரிமைகள் இருக்கிறது என்று விளக்கம் கொடுக்க, அதற்கெல்லாம் அசராத கூல் சுரேஷ் அப்படியா? என்று நார்மலா பேசிக் கொண்டிருக்கிறார். இவர் உண்மையிலேயே இப்படித்தானா? இல்லை முதல் நாள் என்பதால் நடித்துக் கொண்டிருக்கிறாரா? என்பது பலருடைய மனதில் எழும் கேள்விதான். ஆனாலும் பொருத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications