பிக் பாஸ் 7 முடிக்கப்படுகிறதா? ஹவுஸ்மேட் குறுக்கு புத்தியில் செய்த செயல்.. கோபத்தில் பிக் பாஸ் முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 13 ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்கை சரியாக விளையாடாமல் தங்களுக்குள் பணத்தை பரிமாறிக் கொண்ட விதத்தை பிக் பாஸ் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
அதோடு இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் எச்சரித்தது மட்டுமல்லாமல் டாஸ்க் நேரத்தில் லைட்டை ஆஃப் பண்ணி தன்னுடைய கோபத்தை காட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இதுவரைக்கும் இல்லாத மாற்றம் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் அளவுக்கு அதிகமாக இருந்தது. இதற்கு முந்தைய சீசன்களோடு ஒப்பிடும்போது இந்த சீசனில் அதிகமான சண்டைகளும், ஆபாசமான இரட்டை அர்த்தமான வசனங்களும் அளவுக்கு அதிகமாக இருந்தது.
அது மட்டும் இல்லாமல் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப் உடைய வெளியேற்றம் இருந்தது. அதனாலேயே அதிகமாக பிக் பாஸ் நிகழ்ச்சி விமர்சிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அடுத்த பிரச்சனை வெடித்திருக்கிறது. அதாவது பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இதை ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 6 பார்த்திருப்போம். அப்போது டான்ஸ் மாரத்தான் நடந்து கொண்டிருக்கும். அதில் யாருடைய டான்ஸ் நன்றாக இருக்கிறதோ அவர்களுக்கு நம்மிடம் இருக்கும் பணத்தை கொடுப்பார்கள். இது கடந்த சீசனில் ஒரு கேம் ஸ்டாட்டர்ஜியா நன்றாக போய்க் கொண்டிருந்தது. யாரிடம் அதிகமான கரன்சி இருக்கிறதோ அவர்தான் அந்த டாஸ்க் வின்னராக தேர்வாகி விடுவார்.

ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்கள் இவர்களுக்குள்ளே காசை பரிமாறி இருக்கிறார்கள். ஏற்கனவே நேற்று நடந்த மணல் டாஸ்க்கில் கூட இதுதான் நடந்தது. அதேபோல இப்போது டான்ஸ் ஆடி அந்த காசு சம்பாதிக்கிறதுக்கு நம்மளே பணத்தை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாம் என்று கேவலமான ஒரு ஸ்டேட்டர்ஸி யூஸ் பண்ணி இருக்கிறார்கள்.
இதனால் பிக் பாஸ் செம டென்ஷன் ஆகி இருக்கிறார். அதனால் கோபமாகி உங்களுக்கு கொடுக்கப்பட்ட கரன்சியை ஷேரிங், ஸட்டர்ஜி செய்து டிஸ்ட்ரிபியூட் பண்ணி உங்களுடைய வேல்யூவை நீங்களே ஏன் குறைச்சிக்கிட்டீங்க. போர்டுல நீங்க என்ன எழுதினாலும் பார்த்துகிட்டு விட்டுருவேன்னு நினைச்சீங்களா? என்று சொல்ல அதற்கு இந்த வார தலைவராக இருக்கும் மணி தல எல்லாரும் பணத்தை கொடுத்துட்டேன் என்று சொல்றாங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து டான்ஸ் மேடையில் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் முன்பு பணம் மொத்தமாக வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது மாயா எனக்கு இந்த பணம் தேவையில்லை என்று சொல்ல அதற்கு கோபமான பூர்ணிமா அந்த பணத்தை தூக்கி எறிந்து இது எனக்கு தேவையில்லை என்று தட்டி விடுகிறார். அதை பார்த்துக் கொண்டிருக்கும் விசித்திரா மற்றும் அனன்யா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது அனன்யா இவங்க தப்பிக்கணும் அதுக்கு தானே இந்த நாடகம் போடுகிறார்கள் என்று பேசிக் கொண்டிருக்க, கோபமாக நடந்து போகும் பூர்ணிமா அங்கு இருக்கும் பொருட்களை தட்டி விட்டு போகிறார். அதற்கு பிக் பாஸ் இந்த வீட்டிற்கு விதிமுறைகளை மதிக்கும் தன்மை இல்லை என்பது இப்ப எனக்கு தெரிகிறது. உங்களால் நான் வெரி டிஸ்டபார்ட்மெண்ட் என்று சொல்லி வீட்டின் விளக்குகளை அணைத்து விடுகிறார்.
இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடக்காத விஷயமாக இருக்கிறது. இதனால் இந்த சீசன் இன்றோடு முடிவுக்கு வருகிறதா? என்ற கேள்விகளும் பலருக்கும் எழுகிறது. ஏற்கனவே இந்த சீசனில் அதிகமான விதிமீறல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசனும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறார். ரகசியம் பேசுவது, மைக்கை கழட்டி வைத்து பேசுவது போன்ற பல செயல்கள் நடந்தாலும் இன்று இவர்களுக்குள் டாஸ்க் பணத்தை மாற்றி ஆடிய ஆட்டம் பிக் பாஸையே கோபப்பட வைத்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications