பிக் பாஸ் 7: வெளியே போக அழுத அர்ச்சனா.. சுவர் ஏறி குதித்த கூல் சுரேஷ்.. பிக் பாஸ் எடுத்த முக்கிய முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 13ஆம் தேதி மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கூல் சுரேஷ் யாருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வர சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்கிறார்.
இதனால் கோபமான பிக் பாஸ் கூல் சுரேஷுக்கு வார்னிங் கொடுக்கிறார். அதே நேரத்தில் அர்ச்சனாவும் நானும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று அழுது கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க் நடக்கும் போதும் ஒரு சுவாரசியமான சம்பவங்கள் நடந்து விடுகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சில பிரச்சனைகள் இணையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் தான் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் டான்ஸ் மராத்தான் ஷோ நடைபெற்று வருகிறது.
அதில் விஷ்ணு போக்கிரி விஜய் ஆகவும், மணி வாரணம் ஆயிரம் சூர்யாவாகவும், தினேஷ் படையப்பா ரஜினி ஆகவும், விசித்திரா நீலாம்பரி ஆகவும், மாயா ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா வாகவும், கூல் சுரேஷ் அவருக்கு பிடித்த மன்மதன் எஸ்டிஆர் ஆகவும், பூர்ணிமா பருத்தி வீரன் முத்தழகு கேரக்டரிலும், ரவீனா ஹாசினியாகவும், அர்ச்சனா திமிரு ஈஸ்வரியாகவும், விஜய் வர்மா மாதவன் கேரக்டரிலும்,
நிக்சன் காதல் கொண்டேன் தனுஷ் ஆகவும், விக்ரம் வெற்றி கொடி கட்டு சுடலை வடிவேலுவாகவும், அனன்யா கஜினி திரைப்படத்தில் அசின் ஆகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் எல்லோருக்கும் பாசிட்டிவான கதாநாயகி கேரக்டர் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் வில்லி கேரக்டர் தந்திருக்கிறார்கள் என்று அர்ச்சனா அழுதபடியே என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுங்கள் என்று பேசிக் கொண்டே இருந்தார்.
ஒருவேளை என்னுடைய கேரக்டர் வெளியே வில்லியாக போய்க்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் தான் எனக்கு வில்லி கேரக்டர் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதனால் நான் இப்போதே வெளியே போக வேண்டும் என்று அர்ச்சனா ஒரு பக்கத்தில் அழுது கொண்டு இருக்க, நான் வீட்டுக்கு போயி ஆக வேண்டும் என்று கூல் சுரேஷ் அங்கிருக்கும் சுவரில் ஏறி வெளியே போவதற்காக முயற்சி செய்து பிக் பாஸ் இடம் மாட்டி கொண்டிருக்கிறார்.
இதனால் கோபமான பிக் பாஸ் கூல் சுரேஷிடம் என்ன பிரச்சனை என்று பேச, அதற்கு கூல் சுரேஷ் எனக்கு வீட்டின் ஞாபகம் ஆகவே இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அதற்கு பிக் பாஸ் கூல் சுரேஷ்க்கு அறிவுரை கூறியிருந்தார். இந்த நிலையில் கூல் சுரேஸ் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா இல்லையா என்று ப்ரோமோவில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications