பிக் பாஸ் 7: பூர்ணிமாவை அப்படி மிரட்டிய கமல்.. ஆனால் இதை மறந்து விட்டாரே? நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 16ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் நடந்த நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் விவாதித்துக் கொண்டிருக்கும் போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பூர்ணிமாவை விளாசி எடுத்திருக்கிறார்.
அதில் கமல்ஹாசன் பூர்ணிமாவை அதிகமாக திட்டி இருக்கிறார். கமல்ஹாசன் கேட்ட கேள்விகளுக்கு பூர்ணிமாவால் பதில் சொல்ல முடியாமல் திணறி இருக்கிறார்.

இதுவரைக்கும் உள்ள சீசன்களை விடவும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அதிகமாக சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் கமல்ஹாசன் எடுத்த முடிவிற்கு அதிகமானோர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவார்கள். ஆனால் இந்த சீசனில் கமல்ஹாசனின் ஒரு தலைபட்சமான செயல்பாடு ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கமல்ஹாசனுக்கு இனி வரும் எலக்ஷனில் பாதிப்பு ஏற்படுமா என்ற ஐயமும் கூட அவருடைய தீவிரமான ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கமல்ஹாசன், தான் தன்னுடைய நிலையில் சரியாகத்தான் இருக்கின்றேன் என்பதை நிரூபிப்பதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதே நேரத்தில் இந்த சீசனை ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக்கி விட வேண்டும் என்றும் பிக் பாஸ் அணியினரும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போதைய சீசன் டாஸ்குகள் எல்லாம் மொக்கையாக இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காரணம் இந்த சீசனில் இன்றோடு 76 நாட்கள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதுவரைக்கும் இந்த சீசனில் பெரிய அளவில் கஷ்டமான டாஸ்க் இல்லை. எப்போதும் பந்து உருட்டுவது, மண்ணை அள்ளி போடுவது, டான்ஸ் ஆடுவது போன்ற டாஸ்க் மட்டும்தான் இருக்கிறது.
அதிலும் போட்டியாளர்கள் பலர் தங்களுடைய வன்மத்தை தான் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கன்டென்ட் கொடுக்கிறோம் என்கிற பெயரில் இவர்கள் போடும் சண்டை சச்சரவுகளை பார்த்து இந்த நிகழ்ச்சியை பலர் இணையத்தில் திட்டி தீர்த்து வருவதை பார்க்க முடிகிறது.. அதிலும் சமீப காலமாக கமல்ஹாசன் மாயா கூட்டணியோடு சேர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்காமல் விளையாடி வருகிறார் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கமல்ஹாசன் பூர்ணிமாவை கிழித்து எடுத்திருக்கிறார். அதாவது பூர்ணிமா தான் பேச வேண்டும் என்று கையை தூக்க அதனை கமல்ஹாசன் கடந்து போயிருக்கிறார். பிறகு மணியிடம் இந்த வாரத்திற்கான தலைவர் பதவி எப்படி இருந்தது என்பதை பற்றி கமல்ஹாசன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது பூர்ணிமாவிடம் நீங்க கையை தூக்கினீங்களே என்ன என்று கேட்கிறார்.
அதற்கு நீங்க என்னை கடந்து போயிட்டீங்க சார் என்று பூர்ணிமா சொல்ல, அது விபத்தாக நடக்கவில்லை வேண்டும் என்று நடந்தது தான் என்று சொல்ல பூர்ணிமா அதிர்ச்சியாகிறார். கூடவே நீங்க என்ன வேணா சொல்லுவீங்க நான் கேட்டுக்குவேன்னு நினைக்கிறீங்களா? என்ன வேணா சொல்லுவீங்களா? ஏய் பூ கொண்டு வாங்கப்பா... யாரு காதுல அந்த பூவை வைக்கிறதுன்னு நீங்க சொல்லி முடிச்சதும் தான் முடிவு பண்ணுவேன்.
இவங்க காதுல வைக்க முடியாது ஏன்னா இங்க மூணு கோடி பேர் இருக்காங்க என்று கமல்ஹாசன் மக்களை கைகாட்டி சொல்கிறார். அதோடு உங்க திட்டம் வந்து நான் கேட்கும்போது பொய் சொல்லி சமாளிச்சுக்கலாம் என்கிறது தானா என்று கேட்க, அதற்கு பூர்ணிமா சமாளிக்கலாம் என்றால் என்ன வேணாலும் சொல்லி சமாளிக்கலாம் என்று சொல்ல, அதற்கு கமல்ஹாசன் நீங்க அதுதான் இப்போ பண்ணிட்டு இருக்கீங்க இல்ல என்று கேட்கிறார்.
தற்பொழுது இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் பூர்ணிமாவை கேள்வி கேட்கும் மாயாவை எப்போதுமே கேள்வி கேட்கவில்லையே என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதிலும் பூர்ணிமாவோடு ஒவ்வொரு முறையும் மாயாவும் சேர்ந்து தான் பிளான் போடுகிறார். ஆனால் வாராவாரம் கமல்ஹாசன் பூர்ணிமாவை மட்டுமே திட்டுகிறார் என்று ரசிகர்கள் பாயிண்ட்டை பிடித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
கடந்த வாரத்தில் கமல், பூர்ணிமாவுக்கு லீவு விட்டு அர்ச்சனா, தினேஷ், விஷ்ணு, மணியை கேள்வி கேட்டு மொக்கை பண்ணிய கமல்ஹாசன் இந்த வாரம் மீண்டும் பூர்ணிமாவிடமே திரும்பி இருக்கும் நிலையில் கடைசி வரைக்கும் மாயாவின் செயல்களை மட்டும் கமல்ஹாசன் கேள்வி கேட்கப் போவதே இல்லையா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications