என்னை அப்படி தொட்டுட்டாரு.. தினேஷை குற்றம் சாட்டும் மாயா.. உண்மையை அம்பலப்படுத்திய பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 1ஆம் தேதிக்கான எபிசோட்டின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் மாயா, தினேஷ் என்னுடைய கையில் மாட்டி இருந்த கயிறு பிடித்து இழுத்துட்டாரு என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.
அதே நேரத்தில் தினேஷ் எப்படி மாயாவிடம் நடந்து கொண்டார் என்பதை பிக் பாஸ் க்ளோசப்பில் காட்டி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன்ஸி டாஸ்க்கில் விஷ்ணு, ஜோவிகா மூவரும் பங்கேற்றிருந்தனர். அதில் நிக்சன் வெற்றி பெற்று இந்த வார தலைவராக இருக்கிறார். தலைவரானதும் இந்த வாரம் நடைபெறும் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடலாம் என்று நிக்சன் நினைத்திருந்த நிலையில் பிக் பாஸ் அவருக்கு கேப்டன் பதவிக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.
ஏற்கனவே கடந்த வாரத்தில் நிக்சன் பிக்பாஸ் கோடுக்கும் டாஸ்க் சுவாரஸ்யமாகவே இல்லை என்று சொல்லி வாய் கொடுத்து மாட்டிக் கொண்டார். அதனாலையே பிக் பாஸ் நீங்கள் ஒரு சில டாஸ்க்கை சொல்லுங்கள் என்று சொல்ல, அதற்கு நிக்சன் ஒரு சில டாஸ்க்களை சொல்லி இருந்தார். இதை நாங்கள் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுவோம் என்று பிக் பாஸ் கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் இந்த வார தலைவராக இருக்கும் கேப்டன் நிக்சனுக்கு புதிய நெருக்கடியை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதாவது நிக்சனின் கேப்டன்ஸியில் யாருக்காவது அநீதி நிகழ்ந்து இருக்கும் பட்சத்தில் வீட்டில் இருக்கும் மணியை அடிக்கலாம். ஒருவேளை பெரும்பாலானோர் மணி அடிக்கும் பட்சத்தில் கேப்டன் பதவி பறிக்கப்படுவதுடன் அவர் நேரடியாக இந்த வார நாமினேஷனில் இடம் பெறுவார் என்றும் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் புதியதாக டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் சிலருடைய கைகள் கயிற்றால் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் மறுமுறை பிக் பாஸ் மணி அடிக்கிற வரைக்கும் எல்லோரும் கயிற்றால் கட்டப்பட்ட கயிறு ஓடு தான் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது. இப்படியான நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மாயா பெட்டில் ஹாயாக படுத்தபடியே காலையில் யாராவது இப்படி கத்துவாங்களா? திருந்தவே திருந்தாத கேஸ் என்று தினேஷை திட்டிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் தினேஷ் சும்மா இவங்க இஷ்டத்துக்கு கழட்டுவாங்கலாம் என்று சொல்லியபடி, இவங்க கிட்ட பேசலனா குடியா முழுகி போயிரும் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து தினேஷ் நடந்து வருகிறார். அவருடைய கையில் ஒரு கயிறு இருக்கிறது. மறுபக்கத்தில் அந்த முடிச்சில் மாயாவின் கைகளை நிக்சன் போட்டு விடுகிறார். அப்போது அந்த சுருக்கு லூசாக இருப்பதால் அதை தினேஷ் டைட் செய்கிறார். அது க்ளோஸ் அப்பில் காட்டப்படுகிறது.
அது தெரியாத மாயா போட்டதுக்கு அப்புறம் இப்படி எல்லாம் பண்ண கூடாது என்று தினேஷ் செய்யாத விஷயத்தை கயிறை வேகமாக பிடித்து இழுத்து காட்டுகிறார். அதற்கு தினேஷ் நான் டைட் தான் பண்ணினேன் என்று சொல்ல, அதற்கு மாயா டோன் டச் மீ என நீங்க தொடக்கூடாது, நான்சென்ஸ் என திட்டியபடியே கையில் மாட்டி இருந்த கயிறை கழட்டி வீசி விட்டு கோபமாக போக நான்சென்ஸ் நீதான் நான்சென்ஸ் என்று தினேஷும் பேசுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications