பிக் பாஸ் 7: விஷ்ணுவின் அக்காவை பற்றி புறம்பேசிய மாயா, பூர்ணிமா, நிக்சன்.. அர்ச்சனா செய்த தக் லைஃப்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இரண்டாவது நாளாக ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இன்று விஷ்ணுவின் சகோதரி மற்றும் அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்த நிலையில் அவர்களை பற்றி மாயா, பூர்ணிமா, நிக்சன் மூவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து நிக்சன் தன்னுடைய தந்தையோடு ஆறு மாசமாக பேசவில்லை என்பதை பற்றி சொல்ல அதற்கு அர்ச்சனா மற்றும் தினேஷ் தக் லைஃப் செய்திருக்கின்றனர். அது பற்றி பார்ப்போம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அதிகமான சண்டை சச்சரவுகள் காட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் இந்த சீசனில் எப்போது ஃப்ரீஸ் டாஸ்க் வரும் என்று ரசிகர்கள் போட்டியாளர்களின் குடும்பத்தினரை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு இருந்தனர். ரசிகர்களை போலவே போட்டியாளர்களும் தங்களுடைய குடும்பத்தினரை பிக்பாஸ் வீட்டிற்குள் அறிமுகப்படுத்துவதற்கு ஆர்வத்தோடு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிக் பாஸ் இன்று முதல் இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அதுவும் ஒரே நாளில் வருவார்கள் என்று சொல்ல முடியாது, இன்று ஒருவர் வரலாம். நாளை இன்னும் ஒரு சிலர் வரலாம் என்றும் இந்த முறை வித்தியாசமாக பிக் பாஸ் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து நேற்று அர்ச்சனா, பூர்ணிமா, விக்ரம், விஜயின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்திருந்தனர்.
இன்று இரண்டாவது நாளில் முதல் ப்ரோமோவில் நிக்சனின் அப்பா வந்திருந்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் விஷ்ணுவின் சகோதரி மற்றும் அம்மா வந்திருந்தார். அது குறித்து தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் நிக்சன், பூர்ணிமா, மாயா மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் அவர்கள் பேசுகையில் எனக்கு விஷ்ணுவின் அக்காவை பார்த்தாலே பயமாய் இருந்தது.
அவங்க போற வரைக்கும் என்னை பார்த்து முறைச்சுக்கிட்டே இருந்தாங்க என்று பூர்ணிமா சொல்ல, உன்ன மட்டும் இல்ல என்னை பார்த்தாலும் இப்படித்தான் முறைச்சாங்க என்றும் மாயா சொல்ல, என்னையும் தான் முறைச்சிக்கிட்டே இருந்தாங்க என்று நிக்சனும் ஆஜராகிறார். இப்படியாக இவர்கள் மூன்று ஒரு பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை தொடர்ந்து இரவில் விஷ்ணு நான் எங்க அக்கா கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது நீ அப்படியே பார்த்துகிட்டு இருந்தியே ஏன் என்று பூர்ணிமாவிடம் கேட்கிறார்.
அதற்குப் பூர்ணிமா நானா என்று கேள்வி கேட்கிறார். அதை தொடர்ந்து அர்ச்சனா, தினேஷ், மணி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது நிக்சன் நான் எங்க அப்பா கூட ஆறு மாசமா பேசுறதே இல்லை. அதான் அவரு சொன்னாருல்ல என் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்கேன், நீ வெளியே வந்த பிறகு தான் இனிமே நான் பிளாக்ல இருந்து எடுக்க போறேன்னு சொன்னாருல்ல என்று சொல்ல அதற்கு அர்ச்சனா சிரித்துக்கொண்டு உங்க அப்பா பேசியது தக்கலைப் தெரியுமா என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்ட இருக்கின்றனர். ஆனாலும் விசித்திரா குடும்பத்தினர் இன்னும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவில்லை. அதனால் அதிகமான ரசிகர்கள் விசித்ராவின் குடும்பத்தை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். விசித்ராவின் கணவர் பல பேட்டிகளில் விசித்திராவை குறித்து பேசி இருந்தாலும்,
விசித்ராவின் மகன்கள் அதிகமாக வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக விசித்ராவின் ரசிகர்களுக்கு தெரிய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் உறவினர்களாக வந்த பல போட்டியாளர்களின் உறவினர்கள் விசித்திராவை பாராட்டி அவரிடம் பாசமாக பேசி இருந்தனர். அதோடு அனைவரும் விசித்திராவிடம் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு பயம் ஏற்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications