விஜயகாந்த் பற்றி ப்ரோமோவில் உருக்கமாக பேசிய கமல்ஹாசன்.. துக்கங்களை தாண்டி நெகிழ்ச்சி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 30ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் இன்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கான காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கிறது.
அதில் கமல்ஹாசன் மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மக்களை ஆழ்ந்த வருத்தத்தில் விஜயகாந்தின் மரணம் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மரண செய்தி கேட்ட நாளிலிருந்து ரசிகர்களும் பிரபலங்களும் அவரைப் பற்றி பல நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அதோடு விஜயகாந்தின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று பலபேர் விஜயகாந்துடைய அருமையை புரிந்து கொண்டு அவருக்காக தாங்கள் தவறவிட்ட வாய்ப்பை நினைத்து வருந்தி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் விஜயகாந்தின் இழப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கமாக பேசியிருக்கிறார்.

இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தாமதமாக மதியம் 2 மணிக்கு தான் வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரம் கமல்ஹாசன் எந்த பஞ்சாயத்து செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ஏற்கனவே கடந்த வாரத்தில் பல டாஸ்க்களில் முறைகேடுகள் நடைபெற்றதால் அது குறித்து விசாரிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் மறைந்த விஜயகாந்த் குறித்து ப்ரோமோவில் கமல்ஹாசன் பேசி இருக்கிறார். அதில் என்னுடைய சோகத்தை.... நம்மில் பலருடைய சோகத்தை... இந்த மேடையில் பகிர்ந்து கொள்வதை நான் கடமையாக நினைக்கிறேன். ஆமாம் விஜயகாந்த் பற்றி தான் சொல்கிறேன். விஜயகாந்த் பற்றி நினைத்து கண்ணீர் சிந்துவதை விட அவரை பற்றி நினைத்து புன்னகைப்பதற்கு நிறைய விஷயங்களை அவர் விட்டு செய்திருக்கிறார்.

இவர் போல் நாமும் வாழ முடியுமா? என்று யோசித்தால்... அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும், நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கு அர்த்தமும் கிடைக்கும்... என்று பேசி இருக்கும் நிலையில் இதற்கு அதிகமான ரசிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விஜய் டிவி தரப்பினரை பாராட்டி வருகிறார்கள். ஒருவரின் இறப்புக்கு ஒரு ஊரே அழுகிறது என்றால் அவன் தான் சிறந்த மனிதனும் தலைவனும் என்று ரமணா படத்தில் விஜயகாந்த்க்காக பேசிய வசனம் அவருக்கே பொருத்தமாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்து பல அவமானங்களை சந்தித்து மக்களுக்காக பல கஷ்டங்களை அனுபவித்த விஜயகாந்தின் இழப்பிற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். விஜயகாந்த் வரிசையில் பல நடிகர்கள் புதியதாக வரலாம் ஆனால் யாராலும் விஜயகாந்த் போன்று ஒரு தலைவனாக உருவாக முடியாது.. அவருக்கு நிகர் அவர்தான் என்றும் பலர் கண்ணீரோடு கமெண்ட்களை குவிக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications