பிக் பாஸ் 7: இந்த வார எலிமினேஷனில் ட்விஸ்ட் வைத்த கமல்ஹாசன்.. கூல் சுரேஷ் செய்த சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் மூன்றாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்று கமல்ஹாசன் கேட்க அதற்கு வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறுகின்றனர்.
அப்போது கமல்ஹாசன் தான் கொண்டு வந்திருந்த எலிமினேஷன் பெயர் வைத்த கார்டை பார்த்ததும் அதிர்ச்சியாகி இருக்கிறார். அதற்கு கூல் சுரேஷ் எதிர்பார்க்காத பதிலை சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சம்பிரதாயம்தான் எலிமினேஷன். வார இறுதி நாட்களில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் இன்று யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. காரணம் சில தினங்களுக்கு முன்பு விக்ரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால் நேற்று முழுவதும் ஜோவிகா வெளியேறியிருக்கிறார் என்று தகவல்கள் கூறப்பட்டது. ஆனால் ஜோவிகாவின் அம்மாவான நடிகை வனிதா தன்னுடைய மகள் வெளியே வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்கு போன் பண்ணி கூப்பிட்டு இருப்பார்கள். நான் இப்போது கோவாவில் இருக்கிறேன் என்று விளக்கமும் கொடுத்திருந்தார்.
அதனால் யார் தான் வெளியேறி இருக்கிறார்கள் என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. இப்படியான நிலையில் இன்றைய எபிசோட்டின் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கமாக கமல்ஹாசன் எலிமினேஷன் ஆகும் நபரின் பெயர் வைத்த கார்டை இப்போதும் கையில் வைத்திருக்கிறார்.
அது போலவே எல்லா போட்டியாளர்களிடம் யார் இந்த வாரம் வெளியே போவார் என்று கேள்வி கேட்க அதில் ஒரு சிலர் விக்ரம் என்று சொல்கின்றனர். ஒரு சிலர் ஜோவிகா என்று சொல்கின்றனர். அந்த நேரத்தில் கூல் சுரேஷிடம் கேட்கும் போது நாங்க என்னதான் சொன்னாலும், கடைசியில் நீங்க நினைச்சது தானே சார் செய்ய போறீங்க.
அப்ப எதுக்கு சார் நாங்க சொல்லிக்கிட்டு என்று சொல்ல அதைக் கேட்டு சிரித்தபடியே கமல்ஹாசன் கையில் கொண்டு வந்திருந்த கார்டை எடுத்து பார்த்ததும் இவரா என்று அதிர்ச்சியாகிறார். கமல்ஹாசனே அதிர்ச்சியாகும் அந்த நபர் யாராக இருக்கும் என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதோடு நெட்டிசன்கள் வழக்கம் போல கமல்ஹாசன் தான் ஒரு நடிகன் என்பதை எப்போதும் நிரூபித்து கொண்டே இருக்கிறார் என்று கலாய்க்கவும் மறக்கவில்லை.












Click it and Unblock the Notifications