பிக் பாஸ் 7: அர்ச்சனாவை அசிங்கப்படுத்திய நிக்சன்.. விசித்திரா கொடுத்த ரியாக்ஷன்.. புது கேங் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 6ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் அர்ச்சனா மீது நிக்சன் அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை வைக்க அதை பார்த்து விசித்திரா அலட்சியமான ரியாக்சன் கொடுக்கிறார்.

அதே நேரத்தில் இதுவரைக்கும் இருந்த கூட்டணி இப்போது உடைபட்டு புதிய கூட்டணி பிக் பாஸ் வீட்டிற்குள் உருவாகிறது. என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

 Bigg Boss Tamil season 7 December 6th promo 3 and fans reaction

அந்த வகையில் இதுவரைக்கும் இல்லாத வகையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் இவர்தான் டைட்டில் வின்னர் என்பது ஒரு சில வாரங்களிலேயே ரசிகர்கள் நிர்ணயித்து விடுவார்கள். பல நேரங்களில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல நடந்திருக்கிறது.

ஒரு சில நேரங்களில் கடைசி நேரத்தில் டுவிஸ்ட் நடந்து இருக்கிறது. ஆனால் இந்த சீசனில் போட்டியாளர்களை மட்டும் யாராலையும் கணிக்க முடியாமல் தான் வகையில் இருக்கிறது. ஒரு சில வாரங்கள் நல்லவர்களாக இருக்கும் போட்டியாளர்கள் மறுவாரமே தங்களுடைய இன்னொரு முகத்தை காட்டி ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை பெற்று விடுகிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக பிரதீப் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு அவருக்கு எதிர்பாராத விதமாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது. பிறகு விசித்திராவிற்கு அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனாலும் ஒரு சில வாரங்களாக விசித்ராவின் நடவடிக்கைகளிலும் மாற்றம் தெரிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த அர்ச்சனா முதல் வாரத்திலேயே ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டார். அதிலும் பிரதீப்புக்கு ஆதரவாக ரசிகர்கள் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் புல்லி கேங் எதிராக அர்ச்சனா கேட்டதாலேயே அவர் கதாநாயகி ரேஞ்சுக்கு ரசிகர்களின் மத்தியில் புகழப்பட்டார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு விக்ரமிடம் டீக்காக சண்டை போட்டது, அதுபோல விஷ்ணுவிடம் சண்டை போட்டுவிட்டு பிறகு நான் மாயா மற்றும் பூர்ணிமாவிடம் வேண்டுமென்றுதான் சண்டைக்கு இழுக்கிறேன்.

ஆனால் அவர்கள் என்னிடம் அலாட்டாக இருக்கிறார்கள் என்று பேசிய வீடியோக்கள் இணையத்தில் வெளியான பிறகு அர்ச்சனா மீதும் ஒரு சிலர் அதிருப்தியை வெளிகாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் தினேஷுக்கு அதிகமான வரவேற்பு இருக்க, அவர்தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் அவரும் விசித்திரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து பேசியபோது தினேஷ் இதைப்பற்றி இருக்க வேண்டாம் என்று சொன்ன கருத்து பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

இதனால் யாரும் சரி என்று சொல்ல முடியாத வகையில் தான் ஒவ்வொரு போட்டியாளர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் நிக்சன் அர்ச்சனாவை பார்த்து ஸ்டாம்ப் பண்றது நீங்க, துள்ளுறவன்.. பலியாடு, கேங் என்ற வார்த்தைகளால் விமர்சிக்கிறார். அதை தொடர்ந்து மாயா, பூர்ணிமா மற்றும் விஜய் இடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது கேங்காக இருப்பவர்கள் கூல் சுரேஷ், தினேஷ், அர்ச்சனா தான் ஆனால் நாம் கேங்காக இருக்கிறோம் என்று சொல்றாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு நிக்சன் அர்ச்சனாவிடம் மேலும் டவுன் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டு நீங்க தான் மற்றவர்களை கேவலப்படுத்தி பேசிட்டு இருக்கீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு கோபமான அர்ச்சனா நிக்சன் இப்படியே பேசிட்டு இருந்தா நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கும் என்று பேசுகிறார். இதை அலட்சியமாக விசித்திரா பார்த்துக் கொண்டிருக்கிறார். எதுவுமே பேசாமல் விசித்திரா பார்த்துக் கொண்டிருக்க இந்த ப்ரோமோ முடிவடைகிறது. இந்த நிலையில் இந்த ப்ரோமோ அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+