பிக் பாஸ் 7: தரம் இல்லை உங்களிடம் நிக்சனை வெளுத்தெடுத்த கமல்ஹாசன்.. ஆனால் இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 9ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் கமல்ஹாசன் வெளியே தண்ணீரில் சென்னை தத்தளிக்கும் போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இது தெரியாமல் உள்ளே சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.

அதுபோல போட்டியாளர்களின் விளையாட்டில் தரம் இல்லை என்பதை கமல்ஹாசன் சுட்டிக்காட்டி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

bigg boss tamil season 7 December 39th Promo 1 and fans reaction

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வழக்கம் போல இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ மதியத்துக்கு மேலே வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்தபடியே கமல்ஹாசன் என்ட்ரி அமர்க்களமாக இருந்தது. இந்த வாரம் நிக்சன் பேசிய கடுமையான வார்த்தைகளுக்கு கமல் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவின் ஆரம்பத்திலேயே ஊரே வெள்ளத்தில் மூழ்கி தவித்துக் கொண்டிருக்கும் விஷயம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு தெரியாது. அவர்கள் விளையாட்டில் மூழ்கி இருக்கிறார்கள். வெளியே தண்ணீர் வடிந்ததும் தரை தெரியும். ஆனால் இவர்கள் மூழ்கி இருக்கும் விளையாட்டு முடிஞ்சா தரம் தெரியாது.

ஏன்னா தரம் இல்லாம தான் விளையாடிக்கிட்டு இருக்காங்க. அந்த தரம் விசாரணை செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இன்று அது குறித்து விசாரிக்கலாம் என்று கமல்ஹாசன் பேசி இருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோவெளியானதும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அதில் நிக்சனுக்கு ரெட் கார்ட் கமல் எப்படியும் கொடுக்க மாட்டார். கடைசி நிக்சன் தான் பேசியதற்கு எல்லாம் மன்னிப்பு கேட்பார்.

அதற்கு கமல்ஹாசனும் மன்னித்து விடுவார். இன்றும் வினுஷா பற்றி நிக்சன் பேசியதை கமல்ஹாசன் நிக்சனிடம் விசாரிக்க மாட்டார். இதனால் கடைசி வரைக்கும் வினுஷாவின் பெயர் பிக் பாஸ் வீட்டிற்குள் அடிபட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் அடுத்தவர்களை உருவ கேலி செய்து மகிழ்ந்த நிக்சனுக்கு தண்டனை கிடைக்காது என்பது பலருடைய காட்டமான கமாண்டுகளாக இருக்கிறது.

அதேபோல நேற்றைய ஸ்டார் டாஸ்க்கில் கடைசி வரை விளையாடி விக்ரம் ஸ்டார் ஜெயித்தது பலராலும் நம்ப முடியாத வகையில் இருப்பதாகவும், இப்படியே இருந்து கடைசியில் விக்ரம் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்ற கப்பை வாங்கப் போகிறாரோ என்பதும் பலருடைய கேள்வியாகவும் இருக்கிறது. அதுபோல ஏற்கனவே கோபமாக பேசி மிரட்டிய விஜய்க்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டது. அது போல இன்று நிக்சனுக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்படுமா என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+