பிக் பாஸை கடுப்பாக்கிய போட்டியாளர்கள்.. அதுவும் இப்படியா? விசித்திராவை பழி வாங்கிய பிரபலம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்து இருந்தார்.. அதில் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெயித்தால் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை காரணத்தை சொல்லி விளக்குங்கள் என்று கூறியிருந்தார்.
அதில் வழக்கம் போல போட்டியாளர்கள் சிலர் சொல்லி வைத்து சொதப்பி வைத்திருந்தனர். இதனால் பிக் பாஸ் கோபமாகி இருக்கிறார்.
அதே நேரத்தில் தினேஷ் விசித்ராவை குறித்து அந்த டாஸ்க்கில் பல தகவல்களை பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து அதிகமான சண்டை சச்சரவுகள் தான் இருக்கிறது என்பது பலருடைய கருத்து. அதிலும் ரசிகர்களை விடவும் இந்த சீசனில் போட்டியாளர்கள் இடம் பிக் பாஸ் மாட்டிக்கொண்டு முழிப்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். சில தினங்களுக்கு முன்பு டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்ற போது கூட சிலர் தங்களுக்குள் பேசி வைத்து செய்த ஏமாற்று வேலையால் பிக் பாஸ் கோபமாக இருந்தார்.
அதை தொடர்ந்து போட்டியாளர்கள் ஏதாவது கண்டண்ட் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று பிக் பாஸ் புதியதாக யோசித்து டாஸ்க் கொடுக்கிறார். ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அதை சொதப்பி வைத்து விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தான் நேற்று ஒரு டாஸ்க் நடைபெற்றது. அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யார் ஜெயித்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை போட்டியாளர்கள் காரணத்தோடு சொல்லுங்கள் என்று சொல்லப்பட்டிருந்தது.
அதை ஆரம்பத்திலேயே போட்டியாளர்கள் சிலர் பேசி வைத்துக்கொண்டு இதை கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதுக்காக உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். அப்போது அர்ச்சனா எனக்கு விக்ரம் ஜெயித்தால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்ல, விக்ரம் வழக்கம்போல அர்ச்சனா ஜெயித்தால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.
அதுபோல அதிகமான போட்டியாளர்கள் ரவீனா ஜெயித்தால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தனர். அதற்கு ரவீனா நீங்கள் எல்லாரும் சொல்வதைப் பார்த்தால் நான் தான் மணியின் விளையாட்டை கெடுக்கிறேன் என்று நினைக்கிறேன். அதனால் நான் இருக்கிற வரைக்கும் மணி ஜெயித்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.
எல்லோரும் இப்படி பேசிக் கொண்டிருக்கும் வேலையில் தினேஷ் விசித்திர குறித்து சில தகவல்களை சொல்லியிருந்தார். அதாவது விசித்ரா ஜெயித்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவர் இந்த வீட்டிற்குள் உண்மையாக இல்லை. எப்போதும் செண்டிமெண்டாக பேசி விளையாடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பெயர் வெளியே நல்ல விதமாக போக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு விசித்திரா விளையாடி வருவதால் அவர் ஜெயித்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த டாஸ்க்கில் எதாவது பெரிய அளவில் பூகம்பம் வெடிக்கும் என்று நினைத்திருந்த பிக் பாஸ்க்கு கடைசியில் இவர்கள் உப்பு சப்பு இல்லாமல் விளையாடியது பார்த்து அதிர்ச்சியே கிடைத்திருக்கும். தினேஷ் மற்றும் விசித்ரா மற்றும் இருவரும் தான் இந்த டாஸ்க்கில் கொஞ்சம்
சீரியஸ் ஆக விளையாடி இருந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.












Click it and Unblock the Notifications