பிக் பாஸ் 7 லைவ்: அர்ச்சனாவை கொல்ல சொல்ல நீ யாரு? நிக்சனை கதறவிட்ட அர்ச்சனாவின் அப்பா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் அர்ச்சனாவின் அப்பா மற்றும் அம்மா அவருக்காக கலந்து கொண்டிருக்கின்றனர்.
அர்ச்சனாவின் பெற்றோர் நிக்சனிடம் அவர் பேசிய வார்த்தைக்கு விளக்கம் கேட்க அதை கேட்டு நிக்சன் பதறி போய் இருக்கிறார்.
அதாவது சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனாவை கள்ளிப்பால் ஊத்தி கொன்னுருக்க வேண்டும் என்று நிக்சன் சொல்லி இருந்ததை குறிப்பிட்டு அர்ச்சனாவின் தந்தை கேள்வி எழுப்பி இருக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்த ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் முதல் குடும்பமாக பூர்ணிமாவின் அம்மா வந்திருந்த நிலையில் அதைத்தொடர்ந்து அர்ச்சனாவின் அம்மாவும் அப்பாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இதை ஆர்வத்தோடு காத்திருந்த அர்ச்சனா அவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் எல்லோரிடமும் சந்தோஷமாக, சகஜமாக பேசிக் கொண்டிருந்த அர்ச்சனாவின் அப்பா விசித்திராவிடம் அர்ச்சனாவிற்காக மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அதுவும் யாரும் ஒரு சிறு துரும்பு உதவி செய்தாலும் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும். ஆனால் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் வாரத்தில் அர்ச்சனா உடைந்து போயிருந்த நேரத்தில் நீங்கள் தான் உறுதுணையாக இருந்தீங்க.
ஆனால் அதை அர்ச்சனா எப்படி மறந்தானு தெரியல. அதனால அவளுக்கு பதிலா நாங்க மன்னிப்பு கேட்கிறோம் என்று விளக்கம் கொடுத்திருந்தனர். அதைத்தொடர்ந்து எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்கும்போது நிக்சனிடம், நிக்சன் நீங்க பேசுனதை எங்களால ஏத்துக்க முடியல.
அதாவது கள்ளிப்பால் ஊத்தி அர்ச்சனாவை கொன்னுருக்க வேண்டும் என்று சொன்னிங்களே...!? அதைக்கேட்டு நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் என்று சொல்ல...அதற்கு நிக்சன் என்னது நானா அப்படி சொன்னனா? நான் எப்பவாவது காமெடிக்கு சொல்லி இருப்பேன் என்று வழக்கம்போல நழுவ பார்த்திருக்கிறார்.
ஏற்கனவே வினுஷாவை பற்றியும் நிக்சன் இப்படி தான் அசிங்கமாக வர்ணித்துவிட்டு பிறகு அது காமெடிக்காக சொன்னது எனக்கு இப்படித்தான் பிடிக்கும் அதைக்காக சொன்னேன் என்று கதையை மாற்றியது போல, இன்று 24 மணி நேர எபிசோடு லைவில் அர்ச்சனாவின் அப்பாவிடமும் நிக்சன் நழுவ பார்க்க அதற்கு அர்ச்சனாவின் அப்பா நேரடியாகவே முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு நீங்க பேசினீங்க, அது எங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திய என்று சொல்லி இருந்தார்.

எந்த ஒரு தந்தையும் தாயும் தன்னுடைய குழந்தையை இன்னொருவர் அதை கொன்று இருக்கலாம் என்று பேசுவதை கேட்டுக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். அதைத்தான் இன்று அர்ச்சனாவின் பெற்றோரும் செய்து இருக்கிறார்கள். ஆனால் நிக்சன் இதற்கு சரியாக பதில் கொடுக்காமல் நழுவி இருக்கிறார். இனி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இது குறித்து விளக்கம் கொடுக்கிறாரா? இல்லை இதையும் வழக்கம்போல சமாளிக்க போகிறாரா? என்று பார்ப்போம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications