கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்திய சேனல்! போட்டியாளர்கள் என்ன இப்படி ஆகிட்டாங்க? அப்போ சுயமரியாதை?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கலாய் பாடல் ஒழிக்கப்பட்டு இருக்கிறது. பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போட்டியாளர்களை பிக் பாஸ் மேடையில் கானா பாலா மற்றும் நிக்சன் இருவரும் கலாய்த்து தள்ளி இருக்கின்றனர்.
ஒவ்வொரு சீசனிலும் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் இதுபோன்று கலாய் இடம் பெற்று வருவதை பார்க்க முடியும். அதிலும்
இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவருக்கும் வித்தியாசமான கலாய் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் பிரம்மாண்டமாக பல நாள் எதிர்பார்ப்பில் இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் இந்த மேடையில் ஒவ்வொருவராக என்ட்ரி கொடுக்கின்றனர். அதிலும் கானா பாலா முதல் ஆளாக என்ட்ரி ஆகி இந்த மூணு வேளை சோறு கொடுத்து துட்டும் தராங்கனு நான் வந்தேன்.
ஆனா இங்க போடுற சண்டைய பார்த்து என்னை தவிக்க விட்டுட்டாங்க என்ற பாட்டு பாடி என்ட்ரி கொடுக்க அதைத்தொடர்ந்து நிக்சனும் வந்து மூணு வேளை சோறு போட்டாலும் எங்க மூக்கு உடைய அளவுக்கு பிரச்சனை இருக்கு என்று பாட்டு பாடி கூல் சுரேஷ் வரவேற்கின்றனர். அதில் நான் உடம்பு குறைக்க போறேன்னு உள்ள சீனு போட்டாரு, கடைசியில் செவுரு ஏறி குதிக்க போனாரு என்று கலாய்த்துக்கொண்டு அடுத்ததாக டைட்டில் வின்னர் என்று தன்னை அழைத்துக் கொண்டு உள்ளே மிச்சர் சாப்பிட்டாரு என்று விக்ரமை கலாய்த்து இருக்கின்றனர்.
அடுத்ததாக 16 லட்சம் பணத்தை தூக்கிய பூர்ணிமாவை நீ மாயா கூட ஜோடி போட்டு பேசிக்கிட்டது எல்லாம் வெளியே தப்பா போச்சு என்று கலாய்த்து இருக்கிறார்கள். அடுத்ததாக சிரித்துக் கொண்டிருக்கும் ரவீனா மணியை பத்தி பேசினா மட்டும் சண்டைக்க வருவாங்க என்று நிக்சன் கலாய்த்துக்கொண்டு அடுத்து இருக்கும் போது கானா பாலா ஜோவிகா கேப்டன் ஆக முடியலன்னு ரொம்ப கோபப்பட்டார்.
ஆனால் அந்த நேரத்தில் தூங்கிக்கொண்டே இருந்தீங்க என்று பொட்டில் அடித்தது போல பாட, முகம் சுருங்கி போனாலும் டான்ஸ் ஆடிக்கொண்டே வந்த ஜோவிகா கானா பாலாவை விட்டுவிட்டு நிக்சனுக்கு மட்டும் வணக்கம் வைத்திருந்தார். அடுத்ததாக அனன்யாவிற்கு இரண்டு முறை உள்ள வந்தாலும் பிரேம் கிடைக்கலையே என்று கலாய்த்து இருக்கின்றனர்.
அதே தொடர்ந்து விசித்ரா வரும்போது தன்னுடைய சொந்த கதையை சொல்லி மக்கள் மனதில் நின்னுட்டாங்க என்று அதிகமாக கலாய் கொடுக்காமல் அடுத்ததாக வந்த பிராவோவை வரவேற்று இருக்கின்றனர். அடுத்ததாக அக்ஷயா, வினுஷா என்று ஆடிக் கொண்டுவர அவர்கள் இருவரையும் காலா பாலா இவர்கள் இருவருக்கும் என்னிடம் கண்டன்ட் எழுத சொன்னாங்க எனக்கு பாட்டு பாடுவதற்கு கண்டண்டு கிடைக்கவில்லை என்று கலாய்த்து பாடி கொண்டிருந்தனர்.
கடைசியில் நிக்சன் நானும் திருந்திட்டேன் என்று அதில் வாக்குமூலமும் கொடுத்து இருக்கிறார். இப்படியாக உள்ளே வந்த போட்டியாளர்கள் அனைவரையும் "கலாய்" என்ற ஒரு காரணத்தை சொல்லி நேரடியாகவே மேடையில் கலாய்த்து இருந்த நிலையிலும் அவர்கள் சிரித்துக் கொண்டே ஆடிக்கொண்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும்.
இந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் பேசினால் போதுமே அன்று பெரிய பூகம்பமே வெடித்திருக்குமே...!
உள்ளே அவ்வளவு சுயமரியாதையை பற்றி பேசி சண்டை போட்டியாளர்களை இன்று இத்தனை பேரு முன்பு சேனல் தரப்பினர் கூப்பிட்டு வைத்து பாட்டு பாடி கலாய்த்து அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த போட்டியாளர்களும் சிரித்துக் கொண்டிருக்கிறார்களே இவர்களுடைய சுயமரியாதை இப்ப மட்டும் எங்கே போச்சு? என்றுதான் பார்த்தவர்களுக்கு கேட்க தோன்றியிருக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications