பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கலவரம்.. கோபமான கூல் சுரேஷ்.. மன்னிப்பு கேட்ட விசித்திரா! தினேஷ் அதிரடி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதற்கான கொண்டாட்டம் இன்னும் கொண்டாடப்படவில்லையே என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
அப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடந்த சில ஹைலைட்டான விஷயங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் தான் போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் கொண்டாட்டத்திலும் சிலர் பிரச்சனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் ரசிகர்களை பெரிய அளவில் முகம் சுளிக்க வைத்த சீசன் என்றால் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுளே இணையத்தில் அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. அதிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப் உடைய வெளியேற்றம் பலரையும் அதிர்ச்சி அடைந்து இந்த நிகழ்ச்சிக்கு எதிராக கருத்து பேச வைத்தது.
அதுபோல உள்ளே நடந்த சில நிகழ்வுகளும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதில் ஐசு மற்றும் நிக்சன் நடவடிக்கைகளும் அதிகமாக பேசப்பட்டன. இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு மாதம் கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டம் இன்னும் கொண்டாடப்படவில்லை என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சி முடிந்த ஒரு சில வாரங்களிலேயே பிக் பாஸ் கொண்டாட்டம் பெரிய லெவெலில் இருக்கும்.
அதில் பிக் பாஸ் போட்டியாளர்களை கலாய்த்து கலாய் பாடலும் இடம் பெற்று இருக்கும். இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் கொண்டாட்டம் கடந்த வாரத்தில் சூட்டிங் முடிவடைந்து இருக்கிறது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததுமே தினேஷ், விஷ்ணு, கூல் சுரேஷ், ப்ராவோ போன்றோர் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது உள்ளே சில ஹைலைட்டான பிரச்சனைகள் நடந்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம் அந்த வகையில் இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வில்லையாம். அதுபோல பிரதீப்போடு சேர்ந்து பவா செல்லதுரை, யுகேந்திரன், ஐசு ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம்.
இப்படியான நிலையில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாயா குரூப்புக்கு மக்கள் மத்தியில் அதிகமான கைத்தட்டல்கள் வந்து கொண்டே இருந்திருக்கிறது. இதை பார்த்து கடுப்பான கூல் சுரேஷ் எங்கேவும் பி ஆர் வைத்து வேலை பாக்குறாங்களா? என்று முணுமுணுத்துக் கொண்டு இருந்தாராம். அதுபோல நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் நீங்கள் யாரிடமாவது மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா என்று பிக் பாஸ் தரப்பில் இருந்து போட்டியாளர்களிடம் கேள்வி கேட்க அதற்கு விசித்திரா நான் தினேஷிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார்.
நடிகை வனிதா மகன் பற்றிய கேள்விக்கு ஜோவிகாவின் பதில்.. இப்படி வெளிப்படையா சொல்லிட்டாரே!
அதோடு நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சில வார்த்தைகள் பேசியது தினேஷை அதிகமாக காயப்படுத்தி இருக்கிறது. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று பொத்தாம் பொதுவாக பேசியிருக்கிறார். அது குறித்து தினேஷ், விசித்திரா எதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்பதை கூட சொல்லாமல் பொதுவாக கேட்டிருக்கிறார்.
எனக்கும் அதில் பெரிய அளவில் விருப்பமில்லை. ஏனென்றால் அவர் மன்னிப்பு கேட்ட விஷயங்கள் எல்லாம் எப்போதோ நடந்து முடிந்து விட்டது. இனி அதைப் பற்றி பேசி பிரச்சனையை பெருசு பண்ண வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் இந்த மன்னிப்பை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை என்று பேசி இருக்கிறாராம். ஆனால் இதையெல்லாம் எபிசோடில் காட்டப் போகிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications