நடிகை வனிதா மகன் பற்றிய கேள்விக்கு ஜோவிகாவின் பதில்.. இப்படி வெளிப்படையா சொல்லிட்டாரே!
சென்னை: நடிகை வனிதா இன்ஸ்டாகிராமில் லைவில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் தன்னுடைய மகன் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் கூறியிருந்தார். அது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வனிதாவின் மகன் பற்றி ஜோவிகாவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வகையில் நடிகை வனிதாவின் வாழ்க்கை திறந்த புத்தகமாகத்தான் இருக்கிறது. வனிதாவின் குடும்ப பிரச்சனை முதல் சினிமா வாழ்க்கை வரை எல்லாமே ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். அந்த வகையில் வனிதா தன்னுடைய தந்தை குடும்பத்தை விட்டு தனியாக தன்னுடைய மகள்களோடு இருந்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆரம்பத்தில் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் இப்போது அவருடைய இரண்டாவது மகளை அவருடைய தந்தை அழைத்துக் கொண்டு போய்விட்டார். அதே நேரத்தில் மூத்த மகள் ஜோவிகா மட்டும் வனிதாவுடன் இருக்கிறார். அதுபோல வனிதாவின் மகனும் தந்தை ஆகாஷோடு இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வனிதாவின் மகன் ஸ்ரீஹரியிடம் ரசிகர் ஒருவர், "நீங்க வனிதாவின் மகன் தானே" என்று கேட்ட கேள்விக்கு,
அதற்கு ஸ்ரீஹரி "நான் ஆகாஷின் மகன்" என்று பதில் அளித்திருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. அது குறித்து வனிதாவும் தன்னுடைய மகனுக்கு அட்வைஸ் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் இப்போது மீண்டும் தன்னுடைய மகன் குறித்து வனிதா பேசியிருக்கிறார். அந்த வகையில் வனிதா சில நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு யாராவது ஒருத்தரைத்தான் தேர்ந்தெடுக்கணும்னு வாய்ப்பு வந்தா நீங்க உங்களோட அப்பாவை தேர்ந்தெடுப்பீங்களா? அல்லது உங்களோட மகனை தேர்ந்தெடுப்பீங்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு வனிதா யார் என்னை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை தான் நான் தேர்ந்தெடுப்பேன். ஆண்களின் பின்னால் ஓடி ஓடி ரொம்ப சோர்ந்து போய் விட்டேன்.
இனி ஒருபோதும் அந்த தப்பை செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர் வனிதாவின் மகள் ஜோவிகாவிடம் உங்களின் அண்ணனான ஸ்ரீஹரியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? அவர் உங்களுக்காக திரும்ப வருவாரா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜோவிகா நீங்கள் யாரையாவது உண்மையாக நேசித்தால் அவர்களை அப்படியே ஃப்ரீயா விட்டு விடுங்கள்.
அவர்கள் உங்களிடம் மீண்டும் வந்தால் அது உங்களுடையது இல்லை என்றால் அது உங்களுடையது இல்லை என்று பதில் கொடுத்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீஹரி குழந்தையாக இருக்கும்போது ஜோவிகாவை கொஞ்சி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதை தொடர்ந்து ஜோவிகா தன்னுடைய அண்ணன் குறித்து வெளிப்படையாக பேசி இருப்பது பலருடைய பாராட்டைப் பெற்று வருகிறது.
அதே நேரத்தில் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான பாசிடிவ் கருத்துக்களை பெற்று வந்தார். ஆனால் மாயா மற்றும் பூர்ணிமா கேங்கில் ஜோவிகா சேர்ந்த பிறகு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக நெகட்டிவ் கருத்துக்களை பெற்று வந்தார். வனிதாவை போலவே அவருடைய மகளுக்கும் அதிகமான நெகட்டிவ் கிடைக்க தொடங்கியது.
ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ச்சியாக ஜோவிகா போட்டோ சூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். விரைவில் கதாநாயகியாக ஜோவிகா களம் இறங்குவார் என்று வனிதா கூறி இருக்கும் நிலையில் அதற்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications