பிக் பாஸில் இருந்து பெட்டியோடு வெளியேறியது யார் தெரியுமா? 16 லட்சத்தை தூக்கிய முக்கிய போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று 94-வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மூன்றாவது நாளாக இன்று வரைக்கும் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் 16 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பூர்ணிமா வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே 12 லட்சத்தோடு விசித்திரா தான் வெளியேறி இருக்கிறார் என்று சில தகவல்கள் நேற்று முழுக்க பரவி வந்திருந்த நிலையில் அது பொய் என்று சொல்லும் விதமாக காலை முதல் லைவில் விசித்ரா வீட்டிற்குள் தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் இருக்கும் பூர்ணிமா பணப்பெட்டியோடு வெளியேறி இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் எதிர்பார்த்திருந்த பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் யார் இந்த டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போவார்கள் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.
ஆனால் ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களுக்குள்ளே கொடுத்த பில்டப் காரணமாகவே பணத்தை யாரும் எட்டி கூட பார்க்கவில்லை. சும்மா நான் எடுக்கப் போகிறேன் நீ எடுக்க போகிறேன் என்று சீன் காட்டிக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் நிஜத்தில் பணத்தை எடுப்பதை பற்றி யோசிக்கவே இல்லை. அதிலும் தினேஷ் நான் 10 லட்சத்துக்கு மேலே வந்தால் எடுத்து விடுவேன் என்று சொல்லியிருந்தார்.
அதுபோல பூர்ணிமா 15 லட்சத்துக்கு மேலே வந்தால் நான் எடுப்பேன் என்றும் கூறியிருந்தார். அர்ச்சனா, விசித்திரா போன்ற நாங்கள் பணப்பெட்டியை தொடவே மாட்டோம் என்றும் கூறி வந்தனர். இப்படியான நிலையில் கடந்த இரண்டு நாட்களை தாண்டி இன்று மூன்றாவது நாளும் வந்துவிட்டது. ஆனாலும் யாரும் பணத்தை எடுப்பது போல தெரியவில்லை.
இதுவரைக்கும் இல்லாத வகையில் பிக் பாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் கொடுத்திருந்தார். அதாவது இந்த சீசனில் பணத்தின் மதிப்பு கூடவும் செய்யலாம் அல்லது திடீர் என்று குறைந்து விடவும் செய்யலாம் அதனால் யார் தேவையோ அவர்கள் உடனே எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். அதுபோல ஒருமுறை பணத்தைக் கூட்டி வைத்தும், ஒருமுறை குறைத்து வைத்தும் பிக்பாஸ் போக்கு காட்டி வந்தார்.
ஆனால் போட்டியாளர்கள் பிக் பாஸ்க்கு போக்கு காட்டிக்கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் நேற்று விசித்திரா 13 லட்சத்தோடு பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் என்று தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தது. அது போல அர்ச்சனா பணத்தை எடுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. அதிலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பஞ்சமே இல்லாமல் அனைத்து போட்டியாளர்களின் கையிலும் பணப்பெட்டி இருப்பது போன்று எடிட் செய்து இவர்தான் தூக்கிட்டு போனார், அவர்தான் தூக்கிட்டு போனார் என்று கன்னா பின்னாவென்று கதை அளந்து வந்தனர்.

இப்படியான நிலையில் இன்று 16 லட்சம் வந்திருக்கும் நிலையில் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்திருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த வார எலிமினேஷனில் விஷ்ணுவை தவிர மீதமுள்ள எல்லா போட்டியாளர்களும் இருக்கின்றனர். அதில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பூர்ணிமா தனக்கு கிடைத்த வாய்ப்பு சரியாக பயன்படுத்தி இருக்கிறார். இதனால் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. எப்படியும் இந்த வாரம் வெளியே தூக்கி விடுவார்கள்... இல்லை என்றாலும் அடுத்த வாரத்தில் ஐந்து பேரில் ஒருவராக பூர்ணிமா இருந்தாலும் கூட வெற்றி கோப்பை அவருக்கு கிடைக்காது, அதனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 16 லட்சத்தோடு பூர்ணிமா வெளியே வந்ததுதான் சரியான முடிவு என்று பலரும் கூறி வருகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை கமெண்டில் தெரிவியுங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications