பிக் பாஸ் 7: வாழ்க்கையை தொலைச்சிட்டியே நிக்சன்.. விஜய் டிவி வெளியிட்ட திடீர் வீடியோ.. செம டுவிஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் விளையாட்டை கலாய்ச்சி விஜய் டிவி புது வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறது.
நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே நேற்று நடந்த பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் வீடியோவில் நிக்சனை விஜய் டிவி அட்மின் பயங்கரமாக கலாய்த்து இருக்கிறார்.
இதனால் இந்த வாரம் நிக்சனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுமா? என்ற கேள்விகள் குவிந்து வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நேற்று முன்தினம் நடந்த டாஸ்க் பற்றி நிக்சன் மற்றும் விஷ்ணு பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் அர்ச்சனா கை தட்டியதால் நிக்சன் அர்ச்சனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் இடையே ஏற்பட்ட தகராறில் அர்ச்சனாவை நிக்சன் போடி, நாயே, கருமம், ச்சீ, த்தூ என்ற வார்த்தைகளால் திட்டி இருந்தார்.
அதோடு இனி வினுஷாவை பற்றி யாராவது பேசினால் சொருகிடுவேன் என்றும் மிரட்டி இருந்தார். அதோடு நான் எங்க ஏரியாவில் இப்படி தான் பேசுவேன். எந்த இடத்திலும் கெட்ட வார்த்தை பேசவில்லை. ஆனால் எனக்கு கோபம் வந்தால் இப்படித்தான் சொருகிடுவேன் என்று பேசுவேன் என்று விளக்கமும் கொடுத்து இருந்தார். அதோடு அடாவடியாக பேசிய நிக்சனுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பலரும் ஆதரவாக பேசியதை பார்க்க முடிந்தது.
ஏற்கனவே பிரதீப் இதுபோன்று முரட்டுத்தனமான வார்த்தைகளை பேசுகிறார் என்று இதே நிக்சன் தான் கமல்ஹாசன் முன்பு கம்ப்ளைன்ட் செய்திருந்தார். ஆனால் இன்று அதே நிக்சன் என்னுடைய ஏரியாவில் நான் இப்படித்தான் பேசுவேன். அதனால் இங்கேயும் இப்படித்தான் பேசுவேன், எப்போதும் இப்படித்தான் பேசுவேன் என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனால் இந்த வாரம் நிக்சனுக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் விஜய் டிவியில் இருந்து புதியதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நிக்சன் மற்றும் அர்ச்சனா சண்டையின்போது எடுத்த கிளிப்ஸ்கள் எடிட் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் உன் வாழ்க்கையை தொலைச்சிட்டியே என்ற டயலாக் இடம் பெற்றிருக்கிறது. அதோடு சொருகி விடுவேன் என்று நிக்சன் சொன்ன டயலாக்குக்கு இந்த வாரம் ஆப்பு உனக்கு இருக்கு என்ற எடிட்டிங் இருக்கிறது.
இதனால் நிக்சனுக்கு இந்த வாரம் கண்டிப்பாக ரெட் கார்டு கிடைக்குமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதே நேரத்தில் விஜய் டிவி அட்மின் இந்த அளவிற்கு நிக்சனை கலாய்த்து வீடியோ வெளியிட்டு இருப்பதற்கு பதிலாக இன்றே அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்கலாமே என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் நாளை என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications