2-வது பூகம்பம் டாஸ்க்கில் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. உள்ளே வரும் முக்கிய போட்டியாளர்.. செம சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 22 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு இரண்டாவது பூகம்பம் டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் ஜெயித்தார்களா? அல்லது அவர்கள் தோற்றார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் பல மாற்றங்கள் கொண்டு வந்திருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு தமிழ் சீசனில் இல்லாத நிலையில் இது முதல்முறையாக இருக்கிறது. அதுபோல இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை 5 போட்டியாளர்கள் அதிரடியாக வைல்ட் கார்டாக ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதுவும் கிட்டத்தட்ட நான்கு வாரங்களை கடந்த நிலையில் ஐந்து போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த விளையாட்டு வேறு விதமாக மாறி இருந்தது. அதுவரைக்கும் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் விறுவிறுப்பு ஏற்படாமல் இருந்தாலும் வைல்ட் கார்ட் என்ட்ரிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி வேற லெவலில் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சிகளில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன மூன்று போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வருவது குறித்து புது டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் போகும் டாஸ்க் வைத்து அதில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தோற்றுவிட்டால் ஏற்கனவே இவர்கள் நாமினேஷன் செய்து வெளியே அனுப்பி வைத்த போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வருவார்கள் என்று கூறியிருப்பதால் யாரெல்லாம் வர போகிறார்களோ என்ற குழப்பத்திலேயே போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முதல் பூகம்பம் டாஸ்க் நடைபெற்றது. அதில் பிக்பாஸுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் தோற்று விட்டனர். அதனால் ஒரு போட்டியாளர் உள்ளே வருவது கன்ஃபார்ம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் இன்று இரண்டாவது பூகம்பம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதிலும் நேற்று போலவே பலகை மற்றும் பந்து வைத்து பிக்பாஸ் தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்து இருக்கிறார்.
ரச்சிதா பிரிந்து இருக்க காரணமே இதுதான்.. இப்ப கூட இது நடந்துச்சு.. தினேஷின் பெற்றோர் சொன்ன ஷாக்
அதில் ஒரு முக்கோண அளவில் ஒரு பலகை ஊஞ்சல் போல தொங்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு பந்துகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பந்துகளை பலகையில் இருக்கும் இரண்டு குழிக்குள் சரியாக ப்லே செய்கிறது தான் டாஸ்க் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் விஷ்ணு விளையாடிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து ஹவுஸ் மேட் வென்றார்களா? அல்லது தோற்றார்களா? என்ற கேள்விகளோடு பிக் பாஸ் ப்ரோமோ முடிந்து இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் ஹவுஸ் மேட் தோற்று விட்டதால் உள்ளே வரும் முதல் போட்டியாளராக வினுஷா தான் இருப்பார் என்று கூறப்படுகிறது. வினுஷா உள்ளே வந்து நிக்சனை தன்னிடம் மன்னிப்பு கேட்காதது குறித்தும் தன்னை பற்றி தவறாக பேசியது குறித்தும் கேள்வி கேட்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications