ரச்சிதா பிரிந்து இருக்க காரணமே இதுதான்.. இப்ப கூட இது நடந்துச்சு.. தினேஷின் பெற்றோர் சொன்ன ஷாக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தினேஷின் பெற்றோர் முதல் முறையாக பேட்டி ஒன்றில் தினேஷ் பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
அதோடு நடிகர் தினேஷ் எதனால் ரச்சிதாவை பிரிந்து இருக்கிறார் என்ற காரணம் பற்றியும் தினேஷின் பெற்றோர் பேசி இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷ் விளையாடும் விளையாட்டு குறித்தும் தினேஷுக்கு எதிராக பிக் பாஸ் வீட்டிற்குள் பேசப்பட்ட வார்த்தைகள் குறித்தும் தங்களுடைய வருத்தத்தை தினேஷின் பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இப்போதைய சூழ்நிலையின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னர் தினேஷ் தான் என்று அதிகமான ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த தினேஷ் யாரையும் சார்ந்து விளையாடாமல் தன்னுடைய தனித்துவத்தின் காரணமாக அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்வது பலருடைய நன்மதிப்பை பெற்று இருக்கிறது.
பிக் பாஸ் 7: தினேஷை, விஷ்ணு நரி என்று சொல்ல காரணம் இது தானா? போலீஸ் ஸ்டேஷன் பிரச்சனை தெரியுமா?
இந்த நிலையில் தினேஷின் பெற்றோர் தினேஷ் பற்றியும் அவருடைய மனைவி ரச்சிதா குறித்தும் பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவருமே பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஒன்றாக நடித்திருந்தனர். அதற்கு முன்பே தினேஷ் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ரச்சிதாவிற்கு தமிழில் முதல் சீரியல் பிரிவோம் சந்திப்போம் தான்.
அந்த சீரியலில் கதாநாயகன் ஆக இருந்த தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து ரச்சிதாவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் அடுத்தடுத்த சீசன்களாக வந்து கொண்டே இருந்தது. தொடர்ச்சியாக சரவணன் மீனாட்சி சீரியலில் ரச்சிதாவே கதாநாயகியாக நடித்து வந்தார். அதேபோல ஜீ தமிழில் நாச்சியார் புறம் என்ற சீரியலில் ரச்சிதாவும் தினேஷும் மீண்டும் ஜோடியாக நடித்திருந்தனர். அந்த சீரியல் கொரோனா காலகட்டத்தில் வேகமாக முடிவுக்கு வந்தது.
அது போல ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் 10 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருந்த நிலையில் அவர்கள் இருவரும் இப்போது சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் ரச்சிதா, தினேஷ் பிரிவுக்கு காரணம் குழந்தை இல்லாததா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இது பற்றி ரச்சிதாவோ அல்லது தினேஷோ யாருமே எந்த தகவல்களும் தெரிவிக்காமல் இருந்தனர்.
கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ரச்சிதா முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அப்போதும் கூட கணவர் குறித்து எந்த தகவலையும் ரச்சிதா பேசவில்லை. கூடவே தான் விரைவில் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளப் போவதாக கூறி இருந்தார். அப்போது தினேஷ் நானும் என்னுடைய மனைவி ரச்சிதாவும் சின்ன சண்டை காரணமாக பிரிந்து இருக்கிறோம். இருவருக்கும் இருக்கும் பிரச்சனை பேசி தீர்க்கக் கூடியது தான். அதனால சீக்கிரமாக நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதற்குப் பிறகு ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு கூட தினேஷ் குறித்து எந்த தகவலையும் பேசாமல் இருந்தார். அதே நேரத்தில் தன்னை போன் செய்து ஆபாசமாக தினேஷ் பேசி வருவதாக ரச்சிதா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அது குறித்து தினேஷ் விளக்கமும் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் தினேஷ் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தினேஷின் பெற்றோர் ரச்சிதா குறித்து பேசி இருக்கின்றனர். அதில் தினேஷின் அம்மா பேசுகையில் ரச்சிதா என்னை மாமியாராக பார்க்கவில்லை. என்னிடம் ஒரு அம்மாவைப் போலத்தான் பாசம் காட்டுவார். நானும் ரச்சிதாவை மகளாகத்தான் பார்த்தேன். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது நாங்கள் அங்கு போனால் அவர் எங்களிடம் நடந்து கொள்வதை பார்த்து அங்கு இருப்பவர்கள் இதுதான் ரச்சிதாவின் அம்மாவா என்று கேட்பார்கள்.
அந்த அளவிற்கு தான் ரச்சிதா நடந்து கொண்டார். ரச்சிதாவை பற்றி நாங்கள் எந்த தவறான கருத்துக்களையும் சொல்ல மாட்டோம். தற்போது போலீஸ் ஸ்டேஷனில் கேஸ் கொடுத்திருக்கிறார்கள். வருவது வரட்டும் தினேஷ் உண்மையில் தெளிவான ஆள். நாங்கள் இந்த விஷயம் குறித்து ஏதாவது சொல்லும்போது கூட அப்பா அது அப்படித்தான் இருக்கும். நீங்க பொறுமையாக இருங்கள் என்று எங்களுக்கு சமாதானம் சொல்லுவார்.
ரச்சிதாவும், தினேஷும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த பிரிவு எத்தனை நாளைக்கு இருக்கும் என்பது தெரியவில்லை. ரச்சிதாவின் உறவினர்கள் எல்லோருமே அருமையானவர்கள். ஆனால் ஒரு சிலரை அப்படி சொல்ல முடியாது. ரச்சிதாவின் கேரக்டர் நல்லது தான். ஆனால் அவர் இப்போது தவறான வழி நடத்துதலின் கீழே இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் 7: லைவ் அப்டேட்.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த தினேஷ்.. கூட்டணி உடைஞ்சு போச்சு
உண்மையில் சொல்லனும்னா ரச்சிதா இவ்வளவு நாள் பிரிந்து இருக்கக்கூடிய ஆளே கிடையாது. ஆனால் இப்போ எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கே தெரியவில்லை. அதுபோல ரச்சிதாவை பற்றி எந்த மாதிரியான தவறான செய்தி வந்தாலும் நாங்கள் அதை நம்பவே மாட்டோம். அவள் அந்த மாதிரி பெண் கிடையாது.
இப்ப கூட ரச்சிதாவின் அப்பா இறந்து போய்விட்டார். அதற்கு நாங்கள் போய்விட்டு வந்தோம் என்று தினேஷின் பெற்றோர் பேசி இருக்கின்றனர். இந்த நிலையில் இது பற்றி ரச்சிதா எந்த ஒரு தகவலையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தெரியப்படுத்தாமல் இருக்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications