பிக் பாஸ் தமிழ் 7: லைவ் அப்டேட்.. யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த தினேஷ்.. கூட்டணி உடைஞ்சு போச்சு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏழு வாரங்களை கடந்திருக்கும் நிலையில் எட்டாவது வார தலைவராக தினேஷ் மீண்டும் தேர்வாகி இருக்கிறார்.
அதனால் இந்த வார தலைவராக இருக்கும் தினேஷ் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் சில போட்டியாளர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

அதில் மூன்று காரணங்களை சொல்லி ஆறு போட்டியாளர்களை தினேஷ் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கும் நிலையில் இந்த வாரம் பெரிய சம்பவம் நடைபெற இருக்கிறது. அதை யாரெல்லாம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்த எதிர்பார்ப்போடு இருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது எட்டாவது வாரத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் இரண்டாவது முறையாக இந்த வாரமும் இந்த வீட்டின் தலைவராக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே கடந்த வாரத்தில் தினேஷுடைய கேப்டன்சி உள்ளே இருக்கும் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவர்ந்திருந்தது.
அனைத்து போட்டியாளர்களுக்கும் பாரபட்சமில்லாமல் தினேஷ் நடந்து கொள்கிறார் என்று பலரும் பாராட்டி இருந்த நிலையில் இந்த வாரமும் அவரே தலைவராக நீடித்திருக்கிறார். வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த தினேஷ் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆகவும் ஜெயிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாகவே ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ஓட்டுகளின் அடிப்படையில் தினேஷுக்கு அதிகமான சப்போர்ட் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் இரண்டும் ஒரே வீடாக செயல்பட்டது. ஆனால் இந்த வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு மூன்று காரணங்களை சொல்லி இந்த வார தலைவர் ஆறு போட்டியாளர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவுறுத்தி இருந்தார். அதனால் தினேஷ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்குள் கூட்டணியை முறியடித்து அனைவரையும் தனித்தனியாக விளையாடும் வகையில் பிரித்து வைத்திருக்கிறார்.
அதாவது இந்த முறை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு ஜோவிகா, விஷ்ணு, மாயா, விக்ரம், விசித்திரா, ஆர்.ஜே பிராவோ என ஆறு போட்டியாளர்கள் தேர்வாகி இருக்கின்றனர். இதில் மாயா மற்றும் பூர்ணிமாவையும் அர்ச்சனா மற்றும் விசித்திராவையும் தினேஷ் வேண்டுமென்றே பிரித்து வைத்திருப்பது இந்த வாரம் பெரும் பஞ்சாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இப்படி ஒரு முடிவை இதுவரைக்கும் யாரும் எடுத்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரைக்கும் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் கேப்டன் ஆகுபவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களை மட்டுமே ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து விட்டு, தங்களுக்கு பிடிக்காதவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருந்த நிலையில் இந்த வாரம் தினேஷ் நிலைமையை சரியாக கையாண்டு இருக்கிறார். இதனால் இந்த வாரம் விளையாட்டில் என்னவெல்லாம் மாற்று நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதுபோல பூர்ணிமா மற்றும் விஷ்ணு இடையே காதல் கண்டண்ட் உருவாகி கொண்டிருக்கிறது. இது ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் மேலும் வளர போகிறதா? அல்லது பெரும் பூகம்பமாக வெடிக்க போகிறதா? என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications