Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் 7: தினேஷை, விஷ்ணு நரி என்று சொல்ல காரணம் இது தானா? போலீஸ் ஸ்டேஷன் பிரச்சனை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார தலைவராக தினேஷ் தேர்வாகி இருக்கிறார். அவருக்கு பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் ஒன்று கொடுத்திருந்தார்.

அதன்படி தினேஷ் விஷ்ணுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது. அப்போது விஷ்ணு தினேஷை பார்த்து நரி என்று திட்டி இருப்பார்.

bigg bos Vishnu and Dinesh already have problems outside the Bigg Boss house

அது குறித்து இப்போது சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஷ்ணு மற்றும் தினேஷுக்கு பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேவே பிரச்சனை இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இப்போது அதிகமான ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று இருப்பவர்களில் ஒருவராக தினேஷ் இருக்கிறார். இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வேண்டும் என்பது பலருடைய கருத்தாகவும் இருக்கிறது.. இப்படியாக இருக்கும் நிலையில் தினேஷ் சீரியல் நடிகை ரச்சிதாவை காதலித்து திருமணம் செய்திருந்ததும் அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதாவோடு சேர்ந்து நடித்த நடிகர் விஷ்ணு கலந்து கொண்டிருக்கும்போது தினேஷும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் சண்டை வரும் என்று பலர் ஆரம்பத்திலேயே கூறி வந்தனர். ஆனால் முதலில் விஷ்ணு மட்டுமே கலந்து கொண்டு இருந்த நிலையில் தினேஷ் வராதது விஷ்ணுவிற்கு ஆறுதலை கொடுத்திருக்கும்.

ஆனால் திடீரென்று வைல்ட் கார்ட் என்ட்ரியாக தினேஷ் உள்ளே நுழைந்ததும் விஷ்ணுவின் முகம் மாறி போய் இருந்தது. அதை தினேஷ் என்ட்ரி போது கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கு என்ன காரணம் என்பதை ஏற்கனவே பேட்டியில் தினேஷ் கூறியிருக்கிறார். அதாவது தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் குறித்து சீரியல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்கும் ஜி.ஜி காவல் நிலையத்தில் தினேஷ் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்திருந்தார்.

அதாவது தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் பிரிந்து இருப்பதற்கு காரணம் ரச்சிதாவை ஜி.ஜி தவறாக வழிநடத்துவது தான் என்று பேட்டியில் தினேஷ் கூறியிருந்தார். அதுபோல ஜி.ஜி இடம் ரச்சிதாவை பற்றி பேசுவதற்காக தான் நான் உங்களிடம் பேச வேண்டும் என்று மெசேஜ் செய்திருந்தேன் ஆனால் அதை தான் அவரை மிரட்டுவதாக சொல்லி இப்பொழுது கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறார் என்று தினேஷ் அதற்கு விளக்கமும் கொடுத்து இருந்தார்.

இப்படியாக இருக்கும் நிலையில அதே கம்ப்ளைன்ட்டில் ஜி.ஜி என்னை மட்டுமல்ல ரச்சிதாவோடு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவையும் தினேஷ் மிரட்டி இருந்தார் என்று குறிப்பிட்டு இருந்தாராம். அது குறித்து தினேஷ் பேட்டிகளில், நான் விஷ்ணுவை மிரட்டலாம் இல்லைங்க, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரச்சிதா வெளியே வந்த பிறகு அவருக்கு விஷ்ணு தான் கார், வீடு போன்றவற்றை வாங்கி கொடுத்திருந்தார்.

ஏற்கனவே ரச்சிதாவை பலர் நண்பர்கள் என்கிற போர்வையில் ஏமாற்றி இருந்தார்கள். அதுபோல இருந்து விடக்கூடாது என்று நினைத்தேன். அது மட்டும் அல்லாமல் ஜி.ஜி அவருடைய கம்பிளைண்டில் நான் விஷ்ணுவை மிரட்டினேன் என்றும் சொல்லியிருந்தார். அது பற்றி கேட்பதற்காக நான் விஷ்ணுவுக்கு எத்தனையோ முறை போன் செய்தேன்.

ஆனால் விஷ்ணு என்னுடைய போனை எடுக்கவே இல்லை என்று பேட்டியில் பேசி இருந்தார். இந்த பிரச்சனையை மையமாக வைத்து தான் நேற்று நடந்த சீக்ரெட் டாஸ்கில் இருவரும் தங்களுடைய கோபத்தை கொட்டி இருந்தார்களா? என்று சந்தேகிக்கப்படுகிறது. எப்படியோ பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷ் வந்த இரண்டு வாரங்கள் அமைதியாக இருந்த விஷ்ணுவிற்கு இப்போது தினேஷோடு பிரச்சனை ஏற்பட தொடங்கி இருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+