3-வது பூகம்பம் டாஸ்க்.. ஜோவிகாவிற்க்கு வார்னிங் கொடுத்த பிக் பாஸ்.. உள்ளே வரும் முக்கிய போட்டியாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 27 ஆம் தேதிக்கான மூன்றாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் மூன்றாவது பூகம்பம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டினர் ஜெயிக்கிறார்களா? தோற்றார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

அதே நேரத்தில் டாஸ்க் நடக்கும் போது சில போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வார்னிங் கொடுத்து இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.

bigg boss tamil season 7 November 23th Promo 1 and fans reaction

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்த சீசனில் இப்போது வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் இருக்கின்றனர். மேலும் ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியே சென்ற மூன்று போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக இந்த வாரம் வர இருக்கிறார்கள் என்று பிக்பாஸ் கூறி இருக்கிறார்.

அதோடு இந்த வாரத்தில் மூன்று டாஸ்க் கொடுக்கப்படும். அதில் பிக்பாஸ் வீட்டினர்கள் தோற்றால் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வருவது கன்ஃபார்ம் ஆகிவிடும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து போட்டியாளர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதுபோல ஏற்கனவே இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் மூன்று போட்டியாளர்கள் தான் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தால் வெளியே செல்ல போகிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இதனால் பலர் பயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே 2 பூகம்பம் டாஸ்க் நடைபெற்றிருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டினர்கள் தோல்வி அடைந்திருக்கின்றனர். இந்த நிலையில் இன்று மூன்றாவது பூகம்பம் டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. அது குறித்த முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போட்டியாளர்கள், கொடுக்கப்பட்டிருக்கும் சீசாவில் ஒரு முனையில் தன்னுடைய காலை ஊன்றி மறுமுனையில் லாக்குகளை சீசாவின் எதிர் முனையில் அடுக்குவது தான் டாஸ்க் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதில் சில போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜோவிகா காலை ஊன்றி இருக்கும்போது அந்த சீசா தரையில் பட்டு விடுகிறது. அதனால் அவர் கேமில் இருந்து வெளியேற்றப்படுகிறார். அதைத் தொடர்ந்து இந்தம் டாஸ்க்கில் பிக் பாஸ் வீட்டினர் தோற்றார்களா? ஜெயித்தார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை இவர்கள் தோற்று இருப்பதால் உள்ள இரண்டு போட்டியாளர்கள் வருவது உறுதியாக இருக்கிறது

அதில் ஒருவர் வினுஷா தேவி என்று கூறப்படுகிறது. அது போல விஜய் வர்மாவும் உறுதியாக உள்ளே வருவார் என்றும் கூறப்படுகிறது. இதனால் இனி விளையாட்டில் பல மாற்றங்கள் நடைபெறும். இந்த நிலையில் வரும் சனிக்கிழமை எபிசோடு ஆர்வம் ரசிகர்களின் மத்தியில் இப்போது இருக்கிறது. ஏற்கனவே விசித்திரா அவருக்கு சினிமா துறையில் ஏற்பட்ட அவலங்கள் குறித்து பேசி இருக்கும் நிலையில் அதுவும் பெரிய அளவில் பரப்பரப்பாக பேசி பட்டு கொண்டு இருக்கிறது.

அது குறித்து கமல்ஹாசன் இந்த வாரம் பேசுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் மூன்று போட்டியாளர்கள் உள்ளே நுழைவதும் பலராலும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் இந்த வர இறுதி நாள் எபிசோடுகளுக்கு ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+