பிக் பாஸ்: மீண்டும் மோதிய இரு துருவங்கள்.. தினேஷ் சொன்ன வார்த்தை.. கதறி அழுத ஜோவிகா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 24ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அடுத்த வார தலைவருக்கான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் நிக்சன், விஷ்ணு, ஜோவிகா மூவரும் போட்டியிட்ட நிலையில் ஜோவிகா கதறி அழுதிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இப்போதுதான் விளையாட்டு சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக இந்த வீட்டின் தலைவராக தினேஷ் இருந்து வருகிறார். இதனால் சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டு கடந்த வாரத்தில் அவரை நேரடியாக நாமினேஷன் செய்திருக்கின்றனர்.
நேற்று நடந்த டாஸ்க்கில் பூர்ணிமாவின் பிளான் படியே உருட்டு டாஸ்க்கில் தோற்று பூர்ணிமா சொன்னது போல சில போட்டியாளர்கள் தினேஷை டார்கெட் செய்து அடுத்த வாரம் நாமினேஷனுக்கு கொண்டு வந்திருந்தனர். இது குறித்து மாயாவிடம் பூர்ணிமா கூறியிருந்தார்.
பாலியல் குற்றச்சாட்டு வைத்த விசித்ராவிடம் தினேஷ் கேட்ட கேள்வி.. வலுக்கும் கண்டனம்.. இந்த பிரச்சனையா?
இந்த நிலையில் அடுத்த வார தலைவர் பதவிக்கான டாஸ்க்கில் இன்றைய முதல் ப்ரோமோவில் நடந்திருக்கிறது. அதில் ஜோவிகா, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் போட்டி இடுகின்றனர். ஏற்கனவே தலைவராக வேண்டும் என்று ஆசையில் நிக்சன், விஷ்ணு, ஜோவிகா மூவருமே எல்லா போட்டியாளர்களிடமும் தங்களுக்கு வாக்களிக்கும் படியும் தங்களுக்கு சப்போர்ட் கொடுக்கும்படியும் கூறிக் கொண்டிருந்ததால் அதன்படி இன்று இவர்கள் மூவரும் தேர்வாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் அங்கு ஒரு போர்டில் கேப்டன்சி என்ற வார்த்தை இருக்கிறது. அதற்கான தெர்மாகோல் அட்டைகள் ஒரு கண்ணாடி குவளைக்குள் போடப்பட்டிருக்கிறது. அதை சரியாக எடுத்து அந்த இடத்தில் பொருத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் நிக்சன் மற்றும் விஷ்ணு இருவரும் சண்டை போட்டு மோதிக்கொண்டு இருக்கின்றனர்.
அப்போது ஒரு கட்டத்தில் தனக்காக கொடுக்கப்பட்ட பாதையில் இருந்து விஷ்ணு தவறி கீழே விழுந்து விட, அப்போது நடுவராக இருக்கும் தினேஷ் இது முடியாது, மீண்டும் முதலிடத்தில் இருந்து வரவேண்டும் என்று கறாராக பேசுகிறார். அடுத்ததாக இதில் தோற்றுப் போன ஜோவிகா இந்த முறையும் நான் இவ்வளவு வந்து கடைசியில் கேப்டனாக ஆக முடியாமல் ஆகிவிட்டதே என்று கதறி அழுது கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஜோவிகா ஒவ்வொரு முறையும் கேப்டன்சி டாஸ்க்கில் செலக்ட் ஆகுவதும் பிறகு தோற்று போய் கண்ணீர் விட்டு அழுவது வாடிக்கையாக்கிவிட்டது என்று பலர் ஆறுதல் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் இதே போன்ற டாஸ்கில் வனிதா பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் போது நொடி பொழுதில் இந்த டாஸ்கை கம்ப்ளீட் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications