Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலியல் குற்றச்சாட்டு வைத்த விசித்ராவிடம் தினேஷ் கேட்ட கேள்வி.. வலுக்கும் கண்டனம்.. இந்த பிரச்சனையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் விசித்ரா தனக்கு பெரிய நடிகர் ஒருவரோடு நடிக்கும் போது ஏற்பட்ட பாலியல் பிரச்சனை குறித்து பேசி இருந்தார்.

அதற்கு தினேஷ் உங்களுக்கு நடந்த நிகழ்வு மோசமானது தான். ஆனால் அதை நீங்கள் இவ்வளவு பெரிய பிளாட்பாரத்தில் சொல்லி இந்த ஃபீல்டில் இருப்பவர்களை பயப்படுத்தி இருக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

 Vichitra talked about the sexual problems so Dineshs question

அதோடு விசித்ரா, தினேஷ் கேட்ட கேள்விக்கு கடும் கோபமாக பதில் அளித்திருக்கிறார். இந்த நிலையில் இப்போது இவர்களுடைய பிரச்சனை இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

அது வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விசித்திரா என்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் என்றால் 2001 ஆம் ஆண்டு நடந்ததுதான். தெலுங்கில் பிரபலமான முன்னணி நடிகர், அவருடைய ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் மலப்புழாவில் நடந்தது. அதனால் அங்குள்ள ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். அந்த ஹோட்டலில் தான் என்னுடைய வருங்கால கணவரை நான் சந்தித்திருந்தேன். அவர் ஜெனரல் மேனேஜராக அந்த ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தில் ஹீரோவிடம் நான் இந்த படத்தில் தான் நடிக்கிறேன் என்பதை அறிமுகம் செய்வதற்காக போனேன்.

ஆனால் அவர் என்னுடைய பெயரைக் கூட கேட்கவில்லை. நீ இந்த படத்தில் நடிக்கிறாயா? அப்போ நைட்டு ரூமுக்கு வந்துடு என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் அப்படி சொன்னதுமே எனக்கு பெரிய ஷாக் ஆக இருந்தது. பிறகு நான் என்னுடைய ரூமுக்கு சென்று தூங்கி விட்டேன். அதனால் ஒரு சிலர் இரவில் என்னுடைய அறையை வந்து தட்டி ரகளை செய்திருந்தனர். இதனால் நான் மிகவும் பயந்தேன்.

எப்படியாவது சூட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஒவ்வொரு நாளும் இதே மாதிரி பிரச்சனையை நான் சகித்துக் கொண்டிருந்தேன். அந்த நடிகர் சொல்லி சில நபர்கள் தினமும் குடித்துவிட்டு வந்து என்னுடைய ரூம் கதவை தட்டி பிரச்சனை செய்தனர். இதை கவனித்து என்னுடைய கணவர் என்னிடம் என்ன பிரச்சனை உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்.

அப்போது நான் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு அரை வேண்டும் நான் இங்கே தங்கி இருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்று சொன்னேன். அவரும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒரு அறையில் தங்க வைத்தார். அது யாருக்குமே தெரியாது. இது அந்த நடிகருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.. நான் அவர்கள் எண்ணத்திற்கு ஒத்துப் போகவில்லை என்பதால் என்னை எப்படியாவது படத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று மொத்த படக்குழுவே பிளான் செய்திருந்தது.

ஒருநாள் படப்பிடிப்பு சண்டை காட்சி நடந்து கொண்டு இருந்தது. ஸ்டண்ட் காட்சியில் மக்கள் எல்லாரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு நபர் பின்னாடி இருந்து என்னை தவறான நோக்கத்தில் பின்பக்கத்தில் கை வைத்தார். நான் முதல் முறை தெரியாமல் நடந்தது என்று அமைதியாகிவிட்டேன். ஆனால் அடுத்த டேக்கிலும் இதே மாதிரி நடந்தது. பிறகு நான் அந்த நபரை கையும் களவுமாக பிடித்துக் கொண்டு ஸ்டண்ட் மாஸ்டர் இடம் ஒப்படைத்தேன்.

ஆனால் அவர் அந்த நபரை எதுவும் செய்யாமல் என்னை பளார் என்று அறைந்தார். அங்கிருந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் யாருமே எனக்கு நடந்த அநீதியை தட்டி கேட்கவில்லை, குரல் கொடுக்கவும் இல்லை. நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். என்னுடைய நண்பர் புகார் கொடுக்க சொன்னார். நானும் புகார் கொடுத்திருந்தேன். அந்த செய்தி, செய்தி சேனல்களிலும் வெளியாகி இருந்தது. ஆனால் எனக்கு திரைத்துறையில் இருந்து யாருமே உதவி செய்யவில்லை.

நடிகர் சங்கத்திடம் நான் பேசும்போது கூட அவர்கள் இதை தூக்கிப் போட்டுவிட்டு நடிப்பை போய் பாருமா என்று அந்த நேரத்தில் தலைவராக இருந்தவர் கூறினார். இதனால் தான் நான் வெறுத்துப் போய் 20 வருடமாக நடிப்பை விட்டு விலகி இருந்தேன் என்று வேதனையோடு கூறி இருந்தார். இந்த டாஸ்க் முடிந்து வந்த பிறகு கிச்சனில் எல்லோரும் சமையல் செய்து கொண்டிருக்கும் போது தினேஷ், விசித்திரவிடம் நீங்கள் இதை இந்த இடத்தில் சொல்லி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுக்கு நடந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது தான். இப்படி நடந்து இருக்க கூடாது. ஆனால் இதை இத்தனை வருடம் கழித்து இந்த இடத்தில் நீங்கள் சொல்லுவதால் உங்களைப் போல இந்த துறையில் வரவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் பலர் பயப்படுவார்கள். இந்த மாதிரி பிரச்சனை சினிமா துறையில் மட்டும் அல்ல எல்லா துறையிலும் இருக்குது. அது போல பெண்களுக்கு மட்டும் இப்படி பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்கிறது இல்ல. ஆண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

அதனால் இதை நீங்கள் தவிர்த்து இருக்கலாம். அதுபோல நானும் சில சங்கங்களில் இருந்திருக்கிறேன் இதுபோன்று வரும் பிரச்சனைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் செய்து இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விசித்திரா இதை எப்படி நீங்க சொல்ல முடியும்? ஒருத்தன் என்கிட்ட தப்பா நடக்கணும்னு ஆசைப்பட்டால் நான் ஒன்னு அவன் கூட போகணும் இல்லனா ஃபீல்டை விட்டே போயிறணுமா?

இதுதான் நீங்க சொல்ல வரீங்களா தான் என்று கேட்க, அதற்கு தினேஷ் நான் அப்படி சொல்ல வரவில்லை. இந்த இடத்தில் நீங்கள் சொல்லி இருக்க வேண்டாம். அது பலரையும் பயப்படுத்தும் என்று எனக்கு தோன்றுகிறது என்று அந்த இடத்தில் பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் தினேஷ் சொன்ன கருத்து தவறு என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தினேஷ் உடைய ரசிகர்கள் அதுவும் சரிதான் கேஸ் கொடுத்த விசித்திரா அதை தொடர்ந்து நடத்தாமல் விட்டு விலகிவிட்டார். பிறகு பல வருடம் கழித்து அனுதாபத்துக்காக இப்போது அந்த பிரச்சனையை தொடங்குகிறாரா? அதுவும் யார் அந்த நடிகர் என்பதையும் தைரியமாக இந்த இடத்தில் சொல்லி இருக்கலாமே? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இப்படியாக கருத்து மோதல்கள் நடந்து வரும் நிலையில் ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இத்தனை வருடம் கழித்தும் அந்த வேதனையை பகிர்ந்து இருக்கும்போது இதை ஏன் சொன்னார் என்று கேட்பது முட்டாள்தனமானது என்று அதிகமான கண்டனங்களும் தினேஷுக்கு எதிராக வலுத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+