பிக் பாஸ் 7: தொடங்கியது கோர்ட் டாஸ்க்.. கிழிக்கப்பட்ட மாயாவின் முகத்திரை.. பிக் பாஸ் வைத்த செக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நவம்பர் 9ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இன்று கோர்ட் டாஸ்க் தொடங்கப்பட்டு இருக்கிறது. அதில் தங்களுக்கு யார் மீது கோபம் இருக்கிறதோ அவர்கள் மீது எதிர்தரப்பு போட்டியாளர்கள் வழக்கு தொடர்கின்றனர்.

மாயா மீது விசித்திரா வழக்கு தொடர விசித்திரா மீது மாயா வழக்கு தொடர்கிறார். இந்த நிலையில் சுவாரஸ்யமான பல நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது அது பற்றி பார்ப்போம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது சர்ச்சைகளாலே ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் பிரதீப் உடைய எதிர்பாராத வெளியேற்றம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருந்தது. அதனாலேயே அதிகமானோர் பிக் பாஸை டேக் செய்து பிரதீப்க்கு ஆதரவாக தொடர்ச்சியாக பதிவு வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பல நடிகர்கள் நடிகைகளும் பிரதீப்க்கு ஆதரவாக பல சேனல்களுக்கு அடுத்தடுத்து பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். அதே நேரத்தில் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் என்னவெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்களோ அதை எல்லாம் நேற்று பிக் பாஸ் அனைவர் முன்னிலையிலும் போட்டு காட்டி புதியதாக பிரச்சனையை கொளுத்தி விட்டு இருக்கிறது.
நிக்சன் வினுஷாவை பற்றி பேசியது, அதுபோல தினேஷை ஆம்பளையா என ஜோவிகா பேசியது போன்ற பல ரகசியங்கள் அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகி இருந்தது. இதை தொடர்ந்து இன்று அடுத்த பிரச்சனையை பிக் பாஸ் கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நீதிமன்ற டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க்காக தான் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

காரணம் ஒவ்வொரு சீசனிலும் இந்த நீதிமன்றம் டாஸ்கின் போது பல பிரச்சனைகள் வெடித்து வரும். அதுபோல இந்த சீசனிலும் இன்று அந்த டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் முதல் ஆளாக விசித்ரா தன்னுடைய வழக்கினை பதிவு செய்கிறார். அதில் மாயா தன்னுடைய கேப்டன் பதவியை மிஸ் யூஸ் பண்ணுகிறார் என்று கம்பளைண்ட் வைத்திருக்கிறார். அதை தொடர்ந்து மாயா, விசித்திரா என்னுடைய டூட்டியை செய்ய விடமாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.
அதை தொடர்ந்து கோர்ட் டாஸ்க்கில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் விசித்திரா மீது கானா பாலா வழக்கு தொடர்கிறார். அர்ச்சனா மீது ஜோவிகா வழக்கு தொடர்கிறார். அதுபோல தினேஷ், மாயா மீது வழக்கு தொடர்கிறார். இப்படியாக இவர்கள் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில் இன்று நீதி வென்றதா? சூழ்ச்சி வீழ்ந்ததா? என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications