வைல்ட் கார்ட் போட்டியாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்.. கூட்டு சதியால் பிரச்சனை.. பிரதீப்பும் இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அக்டோபர் 30ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
. இதில் நேற்று வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த ஐந்து போட்டியாளர்களையும் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்கள் டார்கெட் செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த வாரமே இவர்களை வெளியே அனுப்பப் போகிறோம் என்று பழைய போட்டியாளர்கள் முகத்துக்கு நேராகவே சபதம் போடுகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் 5 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். ஏற்கனவே உள்ளே இருந்த 18 போட்டியாளர்களில் மூன்று பேர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். ஆக மொத்தம் அங்கே ஐந்து போட்டியாளர்கள் வெளியே சென்றதும் புதியதாக ஐந்து போட்டியாளர்கள் உள்ளே இறக்கப்பட்டு இருக்கின்றனர்.
18 போட்டியாளர்களோடு இப்போது பிக் பாஸ் வீடு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புது போட்டியாளர்கள் வந்ததுமே நேற்று பிரதீப், மாயா, நிக்சன், ஜோவிகா என நான்கு பேரும் புது போட்டியாளர்களை எப்படி வெளியே துரத்தலாம் என்கிற ரீதியில் ப்ளான் போட்டுக் கொண்டிருந்தனர்.
ஏற்கனவே மூன்று வாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அதற்கு தகுந்த மாதிரி புதிய போட்டியாளர்கள் விளையாடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட பழைய போட்டியாளர்கள் புதிய போட்டியாளர்களை கோபப்படுத்தி அவர்களை வெளியே ஓட வைக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இனி புதியதாக வந்திருக்கும் போட்டியாளர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமா போர்டில் தெரியும் வார்த்தைகளை படிக்கிறார். அதில் ஒரு நபரை இந்த வீட்டில் நான் நம்ப மாட்டேன் என்று கேள்விக்கு, பூர்ணிமா தினேஷை கூறுகிறார். அதைக் கேட்டு தினேஷ் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து அர்ச்சனாவின் பெயரை சொல்கிறார்.
அப்போது அன்னபாரதி, அர்ச்சனா என்ன நடக்குதுன்னு புரியுதா என்று கேட்க அதற்கு அர்ச்சனா கேங்கப் பண்றாங்க நம்மள என்று சொல்கிறார். அதை தொடர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு விசித்திரா அன்னபாரதி, தினேஷ், அர்ச்சனா, கானா பாலா, ஆர் ஜே பிராவோ என ஆறு போட்டியாளர்களை அனுப்பி வைக்கின்றனர். அதைத் தொடர்ந்து தினேஷ் பூர்ணிமாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது பூர்ணிமா என்னுடைய ஓன் டிசிஷன் நீங்க போக வேண்டும் என்பது என்று சொல்ல, அதற்கு தினேஷ் நீங்க இன்ஃப்ளான்ஸ் ஆகி சொல்றீங்க என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து அர்ச்சனா நீங்க எல்லாரும் பிளான் பண்ணி சொல்றீங்க என்று சொல்ல அதற்கு பூர்ணிமா உள்ளிட்ட ஒரு சிலர் ஆமா பிளான் பண்ணி தாங்க நாங்க பண்ணனுனோம் என்று கூறுகின்றனர்.
இப்படியாக இரு வீட்டாருக்கும் பகை முற்றி இருக்கிறது. அதே நேரத்தில் எல்லோரும் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அடுத்தவர்கள் மீது இவ்வளவு பொறாமை இருக்கக் கூடாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நேற்று பிரதீப், மாயா, நிக்சன், ஜோவிகா என நான்கு பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது புது போட்டியாளர்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்ததை வைத்து இன்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் பிரதீப் கூட இப்படி எல்லாம் பண்ணுவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையே என்று பலர் கூறி வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications