பாண்டியன் ஸ்டோரின் கடைசி நாள் சூட்டிங்.. அவசரசரமாக பேசிய கண்ணன்.. கடைசியில் சொன்னது தான் ஹைலைட்டே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கிறது.
இதில் போட்டியாளராக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் நடிகர் சரவணன் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு முன்பு எடுத்த வீடியோ ஒன்று தற்போது அவருடைய instagram பக்கத்தில் வெளியாகியிருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் அனைவரும் பல மாதங்களாகவே காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் சின்ன திரையில் பிரபலமடைந்த நடிகர் சரவணன் இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
இறுதியாக பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் யார் இந்த முறை டைட்டில் வெல்ல போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு முதல் நாளே தொடங்கியிருக்கிறது. காரணம் இந்த முறை அதிகமான போட்டியாளர்கள் இளைஞர்களாக இருக்கும் நிலையில் இந்த முறை ரசிகர்களின் மத்தியில் அவர்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கப் போகிறது என்று யூகிக்க முடியாது வகையில் இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கண்ணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் வீடியோ பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
அதில் நான் இப்போதுதான் அவசர அவசரமா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கடைசி நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கிளம்பி கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க போக போறேன். அதற்கு முன்பு உங்களிடம் பேசிவிடலாம் என்று நினைத்தேன். இன்னும் மூன்று மாதங்கள் நான் போன் எதுவும் யூஸ் பண்ண முடியாது. உங்களிடம் பேசவும் முடியாது. ஆனால் கண்டிப்பாக நான் மூன்று மாதங்கள் அங்கு இருந்து வெற்றியோடு கப் ஜெயித்து விட்டு தான் வருவேன். அதற்கு நீங்கள் தான் எனக்கு சப்போர்ட் செய்ய வேண்டும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்படி கண்ணனுக்கு சப்போர்ட் கொடுப்பீங்களோ அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணனுக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுப்பீங்க என்று நான் நம்புகிறேன். நீங்கள் எனக்காக அனுப்பும் கமண்டுகளுக்கும், கேள்விகளுக்கும் நான் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு உங்களுக்கு பதில் தருவேன். இது நான் ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்திருந்தது தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போலவே எனக்கு இதுவும் பெரிய ஆஃபர் என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த வீடியோவிற்கு அதிகமானோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறது என்பது உண்மை தானா? அதனால்தான் கடைசி நாள் சூட்டிங் முடித்துவிட்டு போகிறேன் என்று கூறியிருக்கிறாரா? பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கான சூட்டிங் முழுதும் முடிவடைந்து விட்டதா?? என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் குவிந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications