இணையத்தை அலற விடும் பிரதீப் விவகாரம்.. சேனல் தரப்பில் இப்படி ஒரு முடிவா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வார சனிக்கிழமை எபிசோடில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
அதற்கு சில பெண் போட்டியாளர்கள் அவரால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிய காரணத்தால் அவருக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்து இருந்தார்.

இதனால் சமூக வலைதளத்தில் அதிகமானோர் பிரதீப்புக்கு ஆதவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் சேனல் தரப்பில் இருந்து புதிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டு இருப்பதாக சில செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்ட முதல் நாளிலிருந்து இந்த சீசனின் டைட்டில் வின்னருக்கு தகுதியாக பிரதீப் தான் இருக்கிறார் என்று ரசிகர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் அவருக்கு திடீரென்று ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் தங்களுடைய எதிர்ப்பினை தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப் தன்னுடைய நியாயத்தை கூற முயற்சித்தும் அதற்கு கமல் வாய்ப்பு கொடுக்காமல் செய்தது இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இதனால் பிரதீப்க்கு ஆதரவாக தொடர்ச்சியாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒன்று திரண்டு கமல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்களையும் டேக் செய்து தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், நடிகர், நடிகைகள் என பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் பிரதீப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. மாயா மற்றும் பூர்ணிமாவின் டீம் ஒன்று சேர்ந்து பிரதீப் மேல் பழி போட்டு இருந்தாலும் அதனை கமல்ஹாசன் தீர விசாரித்திருக்க வேண்டும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
அதோடு உள்ளே எல்லோரும் கெட்ட வார்த்தை பேசிக் கொண்டும், இரட்டை அர்த்த வசனங்களை பேசிக்கொண்டு இருந்தாலும் பிரதீப்க்கு அவர் தரப்பு நியாயத்தை கேட்கவில்லையே என்று பலர் கமல்ஹாசனை டேக் செய்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் பிரதீப்க்கு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பு இருப்பதாக இப்போது ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

ரசிகர்களும் இதை விரும்பி வருவதால் Bring back pradeep என்ற ஹேஸ் டேக்கை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஆனால் இனி கமலே பிரதீப்பை கூப்பிட்டாலும் இதற்கு மேல் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று பிரதீப் முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு பக்கத்தில் இருக்கும் போது கண்டிப்பாக மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சமூக வலைதளத்தில் நடக்கும் கமெண்ட் போரை பார்க்கும்போது இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்குமா? அல்லது கடந்த சீசனில் அசீமுக்கு டைட்டில் கொடுக்கும்போது ரசிகர்கள் பலர் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கும்போதும் சேனல் தரப்பில் அமைதியாக இருந்தது போலவே இப்போதும் இருக்க போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications