Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐசு அப்பா பேசிய வாட்ஸ் அப் சேட்டிங்கை லீக் செய்த பிரதீப்.. பிரச்சனைக்கு காரணம் அந்த பிரபலங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் தன்னிடம் ஐசுவின் அப்பா பேசிய ஸ்கிரீன்ஷாட்டை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பின்பு அதை டெலிட் செய்து இருக்கிறார்.

பிரதீப் பதிவிட்ட சில நிமிடங்களிலே அந்த ஸ்கிரீன்ஷாட் புகைப்படங்கள் வைரலாகியது. அதனால் தன்னை நம்பி ஒருவர் பேசிய விஷயத்தை பிரதீப் இப்படி அம்பலப்படுத்தி இருக்கிறாரே என்று பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்

bigg boss tamil season 7 Pradeep posted the screenshot of Aisu father talking to him

இந்த நிலையில் பிரதீப் வெளியிட்ட பதிவை சிலர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தற்போது அதை சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு இருக்கின்றனர். அதில் ஐசுவின் அப்பா பிக் பாஸ் போட்டியாளர்கள் சிலரை பற்றி பிரதீப்பிடம் பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளும், சண்டை சச்சரவுகளும் பஞ்சம் இல்லாததுதான். அந்த மாதிரி தான் தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் இருந்து வருகிறது. இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களுக்கு முன்பு பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரதீப் தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கருத்துக்களையும் தான் வெளியே செல்லும் இடங்கள் எல்லாம் புகைப்படம் எடுத்தும் பதிவிட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் தன்னிடம் பிக்பாஸ் போட்டியாளரான ஐசுவின் அப்பா பேசிய whatsapp ஸ்கிரீன் ஷாட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

bigg boss tamil season 7 Pradeep posted the screenshot of Aisu father talking to him

பிரதீப் பதிவிட்ட ஒரு சில நிமிடங்களில் அதை டெலிட் செய்திருக்கிறார். ஆனாலும் அந்த பதிவை ஒரு சிலர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐசுவின் விளையாட்டு அவருடைய குடும்பத்தை அதிகமாக மன உளைச்சலில் ஏற்படுத்தி இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் ஐசு,நிக்சன் இடம் நெருங்கி பழகி வந்திருந்த நிலையில் பிரதீப் பேசுவது மற்றும் நடந்து கொள்வது எங்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு சிலரோடு சேர்ந்து ஐசுவும் ரெக்கார்டு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியே வந்ததும் ஐசு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் நீண்ட ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் பிரதீப்க்கு ரெட் கார்ட் தூக்கியதற்காக நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் உன்னை ஏமாற்றி இருக்கக் கூடாது. அது போல நிக்சனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் பிரதீப்பிடம் ஐசுவின் அப்பா பிரதீப் வெளியே வந்த நேரத்தில் அவரிடம் வாட்ஸ் அப்பில் பேசி இருக்கிறார். அந்த whatsapp ஸ்கிரீன்ஷாட் ஐ பிரதீப் பதிவிட்டு இருக்கிறார். அந்த உரையாடலில் நண்பா, எப்படி ஒவ்வொரு நாளையும் கடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இந்த வாரம் ஐசு எலிமினேட் ஆனால் மிகவும் சந்தோஷப்படுவேன். நீங்கள் உள்ளே செல்ல வாய்ப்பு இருந்தால் தயவு செய்து நிக்சனிடம் இருந்து அவளை காப்பாற்றுங்கள்.

இப்போது ஒரு சகோதரனாக என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று மெசேஜ் செய்திருக்கிறார். இதற்கு பிரதீப் உங்களுக்கு நான் எப்படி உதவி செய்வது என்பது தெரியவில்லை. அவளுக்காக என் பெயரை தவறாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். எனக்கு தெரிந்து இந்த வாரம் அவள் வெளியே வந்து விடுவாள் என்று நினைக்கிறேன். அது மட்டும் தான் நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி.

கவலைப்படாதீர்கள் எனக்கு தெரிந்து அவள் ஸ்ட்ராங்கான பெண் தான். அவள் எதையும் சமாளித்துக் கொள்வார் என்று பதிலளித்திருக்கிறார். அதற்கு ஐசுவின் அப்பா ஆமாம் உங்கள் பெயரை அவள் தப்பாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறாள். இதற்கு காரணம் மாயா மற்றும் பூர்ணிமா தான். தயவுசெய்து ஐசுவை மன்னித்து விடுங்கள். அவளுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்பதே தெரியவில்லை.

பூர்ணிமாவை தான் வெளியே அனுப்பி இருக்க வேண்டும் ஆனால் நீங்கள் உள்ளே போனால் ஐசுவுக்கு சொல்லி புரியவைங்கள் வெளியில் இருக்கும் வெறுப்புகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அந்த பதிவில் ஐசுவின் தந்தை பேசியிருக்கிறார். இந்த ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வரும் நிலையில் பிரதீப் செய்தது ரொம்பவே தவறானது.

எதற்காக தன்னை நம்பி ஒருவர் பேசிய விஷயத்தை இப்படி அம்பலப்படுத்த வேண்டும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதே நேரத்தில் அப்போ ஏற்கனவே ஐசுவின் பெற்றோர்கள் கூறியதால் தான் ஐசு வெளியேற்றப்பட்டார் என்று வெளியான செய்தி இப்போ வெளியான ஸ்கிரீன்ஷாட்டால் உறுதியாகி இருக்கிறது என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+