பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது சரிதானா? ரவீனா பேச மியூட் செய்யப்பட்டது “இது” தான்.. சீச்சீ மோசம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது.
அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சிவர் பிரதீப் மீது குற்றம் சாட்டி இருந்தனர். அந்த நேரத்தில் ரவீனா சொன்ன குற்ற சாட்டு மியூட் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அது என்ன என்பது பற்றி ரவீனா பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது சரிதானோ என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அதிகமாக சண்டை சச்சரவுகள் இருந்து வரும் நிலையில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது இணையத்தில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டிற்குள் சில போட்டியாளர்கள் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி செங்கொடி தூக்க அதனால் கமல்ஹாசன் விசாரணை நடத்தி பிரதீப்புக்கு அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியே அனுப்பப்பட்டது.
இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் பிரதீப்பிடம் எதுவுமே கேட்காமல் ரெட் கார்ட் கொடுத்தது தவறு என்று பல பிரபலங்களும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரதீப்க்கு எதிராக சிலர் போட்டியாளர்கள் குற்றசாட்டுகள் வைத்துக் கொண்டிருக்கும்போது ரவீனா என்னுடைய அருணா கயிறு பற்றி பிரதீப் பேசுகிறார் என்று சொல்லி மேலும் ஒரு சில வார்த்தைகளை பேசி இருப்பார்.
அப்போது அது சில நிமிடங்களுக்கு மியுட் செய்யப்பட்டது. அதை கேட்டதும் கமல்ஹாசன் கடுமையாக கோபப்பட்டு இருப்பார். ஆனால் அப்போது பிரதீப் ரியாக்ஷன் நான் இது சொன்னனா என்பது போல ஒரு பாவணையும் வைத்திருப்பார். ஆனால் ரவீனா என்ன சொன்னார் என்ற வார்த்தை யாருக்கும் தெரியவில்லை. இதனாலேயே ரவீனா என்னதான் அப்படி சொன்னார் எதனால் மியூட் செய்யப்பட்டது என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் 24 மணி நேர எபிசொட்டில் நடந்த நிகழ்வுகள் தற்போது வீடியோவாக வெளியாகி வருகிறது. அதில் ஒரு டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. "அப்போது நான் ஜெயித்தால் நீ கக்காவை வாயில் வாங்கிக்குவியா" என்று பிரதீப் ரவீனாவிடம் கேட்கிறார். அதற்கு ரவீனா சீ....சீ என்று சொல்கிறார். இதைத்தான் கமல்ஹாசன் முன்பு ரவீனா சொல்லி இருக்க அது மியூட் செய்யப்பட்டது.

ஆனால் டாஸ்க் நேரத்தில் தான் சொன்னதையே பிரதீப் மறந்து விட்டாரா? அதனால் தான் கமல்ஹாசன் முன்பு ரவீனா சொல்லும் போது கூட இது எப்ப நடந்தது என்பது போன்று முகத்தை எக்ஸ்பிரஷன் வச்சாரா? என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் இந்த மாதிரி மோசமான வார்த்தைகளை பேசும் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததில் தவறு இல்லை என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.
பிக் பாஸ் 7: வினுஷா இன்னர் தெரியும் போது பிரதீப் இப்படித்தான் பண்ணுனான்.. அர்ச்சனா சொன்ன பகீர்
அதே நேரத்தில் பிரதீப் பெண்களின் ஆடை விலகி இருந்த சமயத்தில் அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார். அதுவும் ரவீனா அருணாகயிறு வெளியே தெரியும் போது கூட அதை சரி செய்வதற்காகத்தான் பிரதீப் கூறியிருக்கிறார். அதுபோல வினுஷாவின் இன்னர் வெளியே தெரியும்போதும் அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார். இப்படி எல்லாம் கேமரா முன்பு பார்த்து பார்த்து செய்த பிரதீப் ஒரு பெண்ணிடம்," கக்காவை வாயில் வாங்கிக்குவியா" என்று கொச்சையாக பேசியது சரியா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
அதே நேரத்தில் பிரதீப் மட்டுமா இப்படி கொச்சையாக பேசினார்? பிக் பாஸ் வீட்டிற்குள் தான் பல பேர் பேசுகிறார்களே என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் தான் கமல்ஹாசன் நீங்கள் ஒரு தவறை செய்தீர்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளாமல் என்னை மட்டும் சொல்கிறீர்களே அவர்கள் செய்தது சரியா என்று பலர் கேள்விகளை மாற்றி கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ...
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications