Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் 7: இந்த வாரம் தினேஷுக்கு ரெட் கார்டா? ரகசியமாக நடக்கும் பிளான்.. லீக்கான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்பு பிரதீப்க்கு அதிரடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இந்த வாரமும் தினேஷுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக மாயா பூர்ணிமா விசித்திரா போன்றோர் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

bigg boss Tamil Season 7 Red card for Dinesh this week? A secret plan

சில தினங்களுக்கு முன்பு தினேஷ் மற்றும் விசித்திரா இடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக பூர்ணிமா, விசித்திராவிற்கு கொடுத்த ஐடியா வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகிறது.

இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத பல அதிசயங்கள் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் ஆரம்பத்தில் தொடங்கியதுதான் தொடங்கினார்கள் ஆரம்பத்தில் இருந்தே கண்டண்டு கொடுக்கிறேன் என்கிற பெயரில் போட்டியாளர்கள் கண்டமேனிக்கு சண்டை மட்டும்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

யார் எப்போது சண்டை போடுவார்கள் என்று யூகிக்க முடியாத வகையில் போட்டியாளர்கள் விதவிதமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் இந்த விளையாட்டை மொத்தமாக மாற்ற வேண்டும் என்பதற்காக 5 போட்டியாளர்கள் இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல்முறையாக மொத்தமாக உள்ளே வைல்ட் கார்ட் என்ட்ரியாக அனுப்பப்பட்டனர்.

வைல்ட் கார்ட் என்ட்ரியாக பார்த்ததும் ஏற்கனவே இருந்த போட்டியாளர்கள் கதி கலங்கி போயிருந்தனர். அதனாலேயே இவர்களை பிரபலமாக விடக்கூடாது என்பதற்காக அவர்களை மொத்தமாக தூக்கி அந்த வார தலைவராக இருந்த பூர்ணிமா சின்ன வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகு பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் அடுத்தடுத்து நடந்து கொண்டிருந்தது.

அதிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதீப் உடன் அதுவரைக்கும் நன்றாக பேசி பழகி வந்த போட்டியாளர்களே அவருக்கு எதிராக செங்கொடி தூக்கி பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முத்திரை குத்தப்பட்டு அவர் வெளியே அனுப்பி வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து இப்போது அடுத்த பிரச்சனை வெடித்திருக்கிறது. அதாவது சில தினங்களுக்கு முன்பு கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அப்போது விசித்திரா தனக்கு தெலுங்கு நடிகர் ஒருவர் பாலியல் தொல்லை தொந்தரவு கொடுத்தது பற்றியும் அப்போது தமிழ் திரைப்பட சங்கத்தினர் யாரும் உதவி செய்யவில்லை என்று வருத்தத்தை கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்த தலைவராக இருக்கும் தினேஷ் நீங்கள் இந்த கதையை இப்போது சொல்லி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தன்னுடைய கருத்தை சொல்ல இதுவரைக்கும் தினேஷ் மீது நல்ல மதிப்பு வைத்திருந்த ரசிகர்கள் என்ன இவர் இப்படி சொல்லிவிட்டாரே என்று அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது அந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டால் வீட்டிற்குள் இருக்கும் உப்பு அல்லது சர்க்கரையை இந்த வாரம் முழுக்கவே போட்டியாளர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அது போலவே டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோற்றுவிட்டதால் வீட்டில் இருக்கும் சர்க்கரையை தினேஷ் எடுத்து தரும்படி பிக் பாஸ் கூறி இருந்தார்.

அப்போது பூர்ணிமா, மாயா, விசித்திரா முதலியோர் சர்க்கரையை பிளான் போட்டு அங்கே இங்கே ஒளித்து வைத்திருந்தனர். அப்போது ஆரம்பத்தில் பொறுமையாக தேடிப் பார்த்து எடுத்துக் கொண்டிருந்த தினேஷ் ஒரு கட்டத்தில் சர்க்கரை மறைத்து வைத்திருப்பதை தராததால் கோபப்பட்டு இருந்தார். அப்போதும் சர்க்கரையை ஒளித்து வைத்தவர்கள் எடுத்துக் கொடுக்காததால் பிக் பாஸ் கேஷ் கனெக்சனை நிறுத்திவிட்டார்.

இதனால் கோபமான தினேஷ் விசித்திராவை திட்டியிருந்தார். உங்க வயசுக்கு அனுபவத்திற்கும் நீங்க இந்த திருட்டு வேலை செய்றது சரியா? என்று கேள்வி கேட்டிருந்தார். இதனால் விசித்திரா நீங்க என்னை பற்றி பேசியது தவறு, என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு தினேஷ் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் கேட்கிற மன்னிப்புக்கு மதிப்பு இருக்கணும்.

மன்னிப்பு மனசிலிருந்து கேட்க வேண்டும் என்று விடாப்பிடியாக கூறி இருந்தார். இதனால் விசித்திரா கோபமாக இருக்கும் நிலையில் அவரிடம் மாயா மற்றும் பூர்ணிமா நீங்க இந்த பிரச்சனையை இப்போ விட்டுருங்க. இந்த வார இறுதியில் கமல் சாரிடம் இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம். இவர் என்னிடம் மரியாதை குறைவாக பேசுவது எனக்கு இந்த வீட்டிற்குள் இருப்பதற்கு கம்பேர்டபுள்ளாக இல்லை.

அது எனக்கு மனரீதியாக கஷ்டப்படுகிறது என்று நீங்கள் சொல்லுங்கள் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் இந்த வாரம் விசித்திரா கொடுக்கும் கம்ப்ளைன்ட் காரணமாக தினேஷுக்கு ரெட் கார்டு கிடைக்குமா? ஏற்கனவே தினேஷ் இந்த போட்டியாளர்களுக்கு டப் போட்டியாளராக இருப்பதால் இவரை தூக்கி விடுவதற்காக அடுத்ததாக பிளான் போடுகிறார்களா? என்று பார்த்தவர்கள் பதறி வருகிறார்கள்.

ஏற்கனவே இரண்டு வாரமாக தினேஷ் தலைவராக இருந்ததால் நேற்று நடந்த டாஸ்க்கில் பூர்ணிமா சக போட்டியாளர்கள் சிலரோடு பேசி வைத்துக் கொண்டு வேண்டும் என்றே டாஸ்க்கில் தோற்று தினேஷை அடுத்த வாரம் நாமினேஷனுக்கு நேரடியாக அனுப்ப வேண்டும் என்று தான் பிளான் போட்டதாக மாயாவிடம் கூறியிருக்கிறார். அதுபோலவே சில போட்டியாளர்கள் தினேஷ் பெயரையே அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேசன் செய்திருக்கின்றனர். இதனால் நாளை என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+