எல்லோரையும் மிரட்டிய பிக் பாஸ்க்கு வந்த பிரச்சனை.. இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க..!
சென்னை: விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றிய பல அப்டேட்டுகளும் ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடு இருக்கிறது என்ற ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து வீடு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் பிக் பாஸ் 2 பேராக இருக்க போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுவரைக்கும் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் அதிகமான டிஆர்பி பெற்ற நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கப்படும் போது ஆரம்பத்தில் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் தயக்கம் இருந்தது. இதுவெல்லாம் சரியாக வருமா? அது எப்படி பெரிய லெவெலில் இருக்கும்? பிரபலங்கள் ஒரு வீட்டில் இணையதளத்தை பயன்படுத்தாமல் 100 நாட்கள் இருக்க முடியுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தது.
அதே நேரத்தில் தாங்கள் பார்த்து ரசித்த பிரபலங்கள் நிஜத்தில் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கியினர். ஒரு சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது. சில செல்போன் நிறுவனத்தில் ஆரம்பத்தில் இலவசமாக சிம்கார்டு கொடுத்து பிறகு அனைவரையும் தங்களுடைய நெட்வொர்க் கீழே கொண்டு வந்ததும் தாங்கள் நிர்ணயித்த பணத்தை வசூலிக்க தொடங்கி மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது போலத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் அமைந்தது.

ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து பல்வேறு பிரபலங்களும் போட்டி போட்டனர். ஆனால் ஒரு சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்பு சேர்த்து வைத்திருந்த மொத்த பெயரும் புகழையும் இந்த நிகழ்ச்சியில் தொலைத்து விட்டனர். இதனாலேயே இப்போது பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பயப்படுகின்றனர் இந்த நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக இருக்கிறது.
அது குறித்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடைசியாக வெளியான ப்ரோமோவில் பிக் பாஸில் இந்த முறை இரண்டு வீடு என்று தகவலை நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பார். இந்த நிலையில் இது பற்றி மேலும் சில தகவல்கள் பரவி வருகிறது. அதில் இந்த முறை இரண்டு வீடு மட்டும் அல்லாமல் இரண்டு பிக்பாஸ் இருப்பார்கள் அவர்கள் இரண்டு வீட்டையும் தனித்தனியாக கவனித்துக் கொண்டு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதாவது ஒரு வீட்டில் பிக் பாஸ் ஆக எப்போதும் இருக்கும் ஆண் பிக் பாஸ் செயல்படுவார் என்றும், அது போல இன்னொரு வீட்டில் பெண் பிக் பாஸ் ஒருவர் இருந்து செயல்பட போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸில் பல அதிரடியான மாற்றங்கள் அடுத்தடுத்து செய்து கொண்டு வருவதால் இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications