பிக் பாஸ் 7:Wild card ஆக வரும் அந்த மூன்று பேர் இவர்கள் தானா? இனிதான் நிக்சனுக்கு பிரச்சனையே இருக்கு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் மூன்று வைல்ட் கார்டு போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறார்கள் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.
அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே அனுப்பப்பட்ட மூன்று போட்டியாளர்கள் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப் போகிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் யாரெல்லாம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வரப் போகிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் ஆரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருந்தனர். அதில் ஒரு சிலர் எலிமினேஷன் காரணமாக வெளியேறி இருக்கும் நிலையிலேயே அழிந்து போட்டியாளர்கள் மொத்தமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தனர்.
இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த மாதிரி நடைபெறவில்லை என்று சொல்லும் அளவிற்கு 5 போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பழைய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் போட்டியாளர்களை பழி வாங்குவதற்காக ஆரம்பத்திலேயே போட்ட ஸ்கெட்ச் அவர்களுக்கே ஆபத்தாக முடிந்தது.
அது ரசிகர்களின் மத்தியில் மாயா மற்றும் பூர்ணிமா கேங் மீதான அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. பூர்ணிமா அந்த வார தலைவராக இருக்கும் நிலையில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி வைல்டு கார்டு போட்டியாளர்கள் அனைவரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்த வண்ணமாகவே இருந்தது.
இந்த நிலையில் இப்போது உள்ளே 14 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் இன்னும் மூன்று போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வரப்போகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அதுவும் ஏற்கனவே சக போட்டியாளர்கள் நாமினேஷன் செய்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு அள்ளுவிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் வரப்போகும் டாஸ்க்கில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஜெயிக்கவில்லை என்றால் உள்ளே வரும் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு வழி விட்டுவிட்டு பழைய போட்டியாளர்கள் வெளியே சென்று விட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனால் வெளியே போகும் மூன்று போட்டியாளர்கள் யார் என்ற ஆர்வமும் அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வரப்போகும் மூன்று போட்டியாளர்கள் யார் என்று ஆர்வமும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. இப்படியான நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பது விஜய் வர்மா, அனன்யா மற்றும் வினுஷா என்று கூறப்படுகிறது.
ஒரு வேலை இதுதான் உண்மையான நிலவரமென்றால் வினுஷாவின் என்ட்ரியால் நிக்சனின் நிலைமை கஷ்டம் தான். ஏற்கனவே வினுஷாவை பற்றி நிச்சன் உருவ கேலி செய்திருந்தது பற்றி அம்பலமாகி இருந்த நிலையில் வினுஷா உள்ளே வந்தால் நிக்சன் பிரச்சனை பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இனி வினுஷா உள்ளே வந்த பிறகாவது நிக்சன் பற்றி கமல் கேள்வி கேட்பாரா என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications