அர்ச்சனா பிக் பாஸுக்குள் “இதை” மட்டும் தான் பண்ணுனாங்க! இதுக்கு டைட்டிலா? பகீர் கிளப்பிய கானா பாலா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரத்தில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அது குறித்த விவாதங்களும், சர்ச்சைகளும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. பல்வேறு தரப்பினார்கள் அர்ச்சனாவிற்க்கு டைட்டில் கொடுத்தது தவறு என்று கூறி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த சீசனில் போட்டியாளராக இருந்த கானா பாலாவும் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.
அர்ச்சனா தன்னோடு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமானார். ஆனால் உள்ளே பெரியதாக எதுவுமே செய்யவில்லையே? அவர் என்ன எஃபெக்ட் கொடுத்தார் என்று அவருக்கு டைட்டில் கொடுத்து இருக்கிறார்கள் என்று கானா பாலா கேள்வி எழுப்பி இருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளும் வதந்திகளும் நிறைந்தது தான். இந்த நிகழ்ச்சி ஒரு உளவியல் சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் வெளியே இருந்த நல்ல பெயரையும் கூட இழந்து போயிருக்கின்றனர். ஒரு சிலர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்களும் இருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த சீசனில் பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் சீசன் தொடங்கிய நாளிலிருந்து நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு கூட வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றது சரியான வெற்றி அல்ல என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அர்ச்சனா பி ஆர் உதவியோடு வெற்றி பெற்றார் என்று அவர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
அதுபோல அர்ச்சனா மீது பிக் பாஸ் அணியினர் அதிருப்தியில் இருப்பதால்தான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு நடந்த கொண்டாட்டத்தில் கூட அழைக்கப்படவில்லை என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது.. இந்த நிலையில் இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த கானா பாலா அர்ச்சனா பத்தி பேட்டி ஒன்றில் கோபமாக பேசியிருக்கிறார்.
அதாவது அர்ச்சனாவுக்கு என்ன அடிப்படையில் கப்பு கொடுத்து இருக்குன்னு தெரியலையே? அவர் அப்படி உள்ள என்ன எஃபெக்ட்டுமே போடவே இல்ல. பிக் பாஸ் வீட்டுக்குள்ள என்னோடுதான் வைல்ட் கார்டு என்ட்ரியாக அறிமுகமாகி உள்ளே வந்தாங்க. வந்த ஒரு வாரம் அழுது கொண்டுதான் இருந்தாங்க. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே எல்லாருக்கும் பிசிகல் டெஸ்ட் மெண்டல் டெஸ்ட் எல்லாம் எடுத்து தான் அனுப்புறாங்க.
ஆனால் உள்ளே போன அடுத்த நாளிலிருந்து மெண்டலாக ஸ்டெடியாக இல்லாமல் அர்ச்சனா அழுது கொண்டே இருந்தார். அதற்கு பிறகு சின்ன சின்ன வேலைகள் கூட செய்வதற்கு அர்ச்சனா பிரச்சனை செய்து கொண்டிருந்தார். நானும் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லா வேலைகளையும் செய்தேன். பாத்திரம் கழுவினேன் காய்கறி வெட்டினேன் ஆனால் அர்ச்சனா அதை எல்லாம் செய்வதற்கு ரொம்பவே யோசித்தார் என்று கானா பாலா பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் இதற்கு அர்ச்சனாவின் ரசிகர்கள் நீங்க உள்ள இருந்தது இரண்டு வாரம் அதற்குள் எதுக்காக இந்த அலப்பறை? கானா பாலா ஒரு வழக்கறிஞராகவும் இருக்கிறார் அதனால் அவர் பல்வேறு தரப்பட்ட மக்களின் மனநிலையை புரிந்து கொண்டவராக இருப்பார் என்று நினைத்தால் பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா கேங்கோடு சேர்ந்து கொண்டு ஒருதலை பட்சமாக தான் பேசிக் கொண்டிருந்தார்.
வெளியே வந்து கூட தன்னுடைய வன்மத்தை கக்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்சனாவின் ரசிகர்கள் கானா பாலாவை திட்டி வருகின்றனர். கடந்த சீசனிலும் இது போல் தான் அசீம் டைட்டில் ஜெயித்தது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது போலவே இந்த சீசனிலும் அர்ச்சனா டைட்டில் வெற்றி பெற்றது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை பற்றி தட்டி விடுங்க.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications