கப்போடு விஜய் டிவி பிரபலத்தை சந்தித்த அர்ச்சனா... ஆனால் இப்போ அந்த போஸ்டால் மாட்டிக்கிட்டாங்களே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 14ஆம் தேதியோடு முடிவுக்கு வந்திருந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக ஜெயித்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக கையில் தான் ஜெயித்த கப்பை கொண்டு போய் விஜய் டிவி பிரபலம் ஒருவரை சந்தித்திருக்கிறார். அதோடு இவர் தான் தனக்கு ஆசிரியர் என்றும் அர்ச்சனா கூறி இருக்கிறார்.
ஆனால் அர்ச்சனா வெளியிட்ட அந்த பதிவில் ரசிகர்கள் அவர் கையில் மாட்டி இருக்கும் பிரேஸ்லெட் குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு எந்த நண்பரும் கிடைக்கவில்லை. எல்லோரும் முதுகுக்கு பின்பு ஒன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று புலம்பி அழுது கொண்டு இருந்த நிலையில் அர்ச்சனா இப்போது செய்திருக்கும் செயல் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் பல்வேறு சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் மாட்டிக் கொண்டிருந்தது. இந்த சீசினில் தான் இரண்டு வீடு கான்செப்ட் தொடங்கப்பட்டது. அதுபோல டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது. அதுபோல வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த அர்ச்சனா இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார்.
இது மூன்றுமே இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடைபெறாதது தான். அதனாலையே இந்த சீசன் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து உள்ளே தங்களுக்குள் சண்டையிட்டும் போட்டி பொறாமையோடும் இருந்து வந்தனர். அதிலும் அர்ச்சனா இந்த சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமான முதல் வாரத்தில் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் இடம் பிடிக்கவில்லை.
ஆனால் அதைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் தனக்கு எதிராக மொத்த பிக் பாஸ் போட்டியாளர்களையும் அர்ச்சனா ஹேண்டில் பண்ணிய விதம் ரசிகர்களை கவர்ந்தது. அதற்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் அர்ச்சனாவுக்கு வரவேற்பு கிடைக்க தொடங்கியது. அதிலும் அர்ச்சனா பிரதீப்புக்கு ஆதரவாக பேசி வந்ததும் இவருக்கு பிரதீப் ரசிகர்களின் மத்தியிலும் பாராட்டு கிடைக்க தொடங்கியிருந்தது. இப்படியான நிலையில் அர்ச்சனாவே இது சீசன் டைட்டில் வின்னர் ஆகி இருந்தார்.
இப்போ வரைக்கும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு சிலர் அர்ச்சனா பி ஆர் சப்போர்ட்டால் தான் டைட்டில் ஜெயித்தார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த பதிவும் வெளியிடாமல் வந்தார். தன்னோடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சில பிக்பாஸ் போட்டியாளர்கள் போடும் போஸ்ட்களுக்கு மட்டும் அவ்வபோது லைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முதல் முறையாக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்டோடு சேர்ந்தெடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். தான் ஜெயித்த கப்பை ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் கையில் கொடுத்து என்னுடைய ஆசிரியர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதே நேரத்தில் இந்த புகைப்படத்தில் அர்ச்சனாவின் கையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ப்ராவோ போட்டு விட்ட பிரேஸ்லெட் இருக்கிறது. அதனால் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் பலமுறை தனக்கு நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று வருந்தி கொண்டு இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு உண்மையான நண்பர் யார் என்பது தெரிந்திருக்கிறது. அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் கூட பிராவோ அணிந்த பிரேஸ்லெட்டை அர்ச்சனா போட்டு இருக்கிறார் என்று பலர் கூறி வருகிறார்கள்.
அதுபோல அர்ச்சனா இயக்குனர் பிரவீன் பென்னட்டை சந்தித்ததற்கு முக்கிய காரணம் தொகுப்பாளராக இருந்த அர்ச்சனாவிற்கு முதல் முறையாக விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடிகையாக வாய்ப்பு கொடுத்தது பிரவீன் பென்னட் தான் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தான் தான் வாங்கிய டைட்டில் வின்னர் கப்பை அவர் கையில் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications