பிக் பாஸ் தமிழ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் திருநங்கை போட்டியாளர்.. அப்போ இந்த முறையும் அனல் பறக்குமா?
சென்னை: விஜய் டிவியில் இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம் வருகிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களாக திருநங்கை போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். அதேபோல இந்த சீசனில் யார் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் இரண்டு சீசன்களாக பெயரடிபட்டுக் கொண்டு வந்த நடிகை ஷகிலாவின் மகள் மிலா தான் இந்த சீசனிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். பொதுவாக மக்களுக்கு அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.

பொதுவாக சாதாரண மக்களின் வீடுகளில் நடக்கும் பல செயல்கள் எதார்த்தமாக இருக்கும். ஆனால் இந்த மாதிரி தான் பிரபலங்கள் வீட்டில் நடந்து கொள்வார்கள்? என்று சிலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பிரபலங்களும் சாதாரண மக்கள் போலத்தான் என்பதை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. என்னதான் பெயர் வாங்கி இருந்தாலும் டாப்பில் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவரா இப்படி என்று ரசிகர்கள் அதிர்ந்து போயி அவர்கள் மீது அதிருப்தியை காட்டி இருக்கிறார்கள்.
அந்த வகையில் பல பேர் தாங்கள் அதுவரைக்கும் கஷ்டப்பட்டு வாங்கி வைத்திருந்த பேரும் புகழையும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இழந்து இருந்தாலும் ஒரு சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழ் உச்சிக்கு சென்றிருக்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதனாலேயே அதுபோல நமக்கும் நடந்துவிடுமா என்று எதிர்பார்ப்பில் பலர் இதில் கலந்து கொள்வதற்காக போட்டி போடுகின்றனர்.
ஆனாலும் பிக் பாஸ் முதல் சீசன் ரசிகர்களிடம் இருந்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்களில் குறைந்து இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு மட்டும் குறைவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் ஆறாவது சீசன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து இனி விரைவில் ஏழாவது சீசன் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
அதே வகையில் ஒரு சிலருடைய பெயர்கள் அதில் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கின்றதுய அந்த வகையில் மாகாபா ஆனந்த் உட்பட சில விஜய் டிவி பிரபலங்கள் இந்த வரிசையில் இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அவர்கள் வரிசையில் இந்த முறை யார் கலந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பும் இருக்கின்றது.
அதற்கு அதிகமான கருத்துக்கள் நடிகை ஷகிலாவின் மகளான மிலா தான் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே மிலா கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பு கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சீசனில் நமிதா மாரிமுத்து கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த சீசனில் சிவின் கணேசன் கலந்து கொண்டார். அதிலும் நமீதா மாரிமுத்து சில தினங்களில் சில பிரச்சனைகளால் வெளியேறி இருந்தாலும் சிவின் கடைசி நாள் வரைக்கும் இருந்து அதிகமான ரசிகர்களுடைய அன்பையும் பெற்றிருந்தார்.
ஏற்கனவே மிலா youtube வீடியோக்களில் பலரையும் பேட்டி எடுத்து பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஏற்கனவே பரவி வந்த வதந்திகள் தான் இந்த சீசனிலும் பரவுகிறதா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் இப்ப வரைக்கும் மிலாவின் தரப்பில் இருந்து எந்த உறுதியான தகவல்களும் கூறப்படவில்லை.












Click it and Unblock the Notifications