நிக்சன் வெளியே போன காரணமே இதுதான் ரகசியத்தை உடைத்த விசித்திரா.. அப்போ விஷயம் சீரியஸ் தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடு நிக்சன் மற்றும் ரவீனா இரண்டு பேரும் வாக்குகளின் அடிப்படையில் எலிமினேஷன் ஆகி வெளியே வந்திருந்தனர். இந்த நிலையில் நிக்சனுடைய வெளியேற்றம் குறித்து இன்று விசித்திரா சக போட்டியாளர்களிடம் பேசி இருக்கிறார்.
அதாவது நிக்சன் வெளியே சென்றதற்கு கடந்த வாரத்தில் அவர் செய்த சில செயல்கள் தான் காரணம் என்று விசித்திரா பேசி அதற்கான விளக்கத்தையும் கொடுத்து இருக்கிறார். அது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
காரணம் கடந்த வாரம் முழுக்க விசித்திராவும் அங்கே தான் இருந்தார் ஆனால் நிக்சன் செய்வது தவறு என்று விசித்திரா ஏன் அப்போது சுட்டிக்காட்டி அவருக்கு அட்வைஸ் செய்யவில்லை என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் இப்போது எட்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். கடந்த வாரத்தில் நிக்சன் மற்றும் ரவீனா 2 எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.
அது குறித்து இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா மற்றும் பூர்ணிமாவிடம் விசித்திரா சில விஷயங்களை பேசி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இதுவரைக்கும் இல்லாத வகையில் கடந்த வாரத்தில் பூர்ணிமாவோடு நிக்சன் நெருக்கமாக பல நாட்கள் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். டாஸ்க் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும் என்பதற்காக பூர்ணிமாவும் நிக்சனும் நெருக்கமாக பாடல்களுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.
இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. அக்கா தம்பி என்று சொல்லிவிட்டு இவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்து பல பேர் கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விசித்திரா பேசிக்கொண்டிருக்கும் போது நிக்சன் இந்த வாரம் வெளியே போனதற்கு காரணம் கடந்த வாரத்தில் பூர்ணிமாவோடு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தது தான் என்று கூறி இருக்கிறார்.
இதை பார்த்த அதிகமான ரசிகர்கள் இப்போது மக்களின் மனதை புரிந்து கொண்ட விசித்திரா கடந்த வாரத்தில் இது தவறாகத்தான் போகும் என்பது புரிந்து நிக்சன் மற்றும் பூர்ணிமாவிற்கு ஏன் அறிவுரை கூறவில்லை என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. மக்கள் என்ன நினைப்பார்கள் என்னை பற்றி வெளியே என்ன சொல்வார்கள் என்று அடிக்கடி பேசிக் கொண்டிருக்கும் விசித்திரா தினேஷிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.
அதுபோல தினேஷ் இல்லாத நேரங்களிலும் தினேஷ் பற்றியே அடுத்தவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். இதுவும் விசித்திரா மீது இருக்கும் நல்ல மதிப்பு குறைவதற்கு காரணமாக மாறிவிடும் என்பதை விசித்திரா ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்? ஒருவேளை தினேஷை பற்றி அடிக்கடி தான் பேசிக் கொண்டே இருப்பதால் அதை மக்கள் சரி என்று நம்பி நம்மை ஆதரிப்பார்கள் என்று விசித்திரா நினைத்துக் கொண்டிருக்கிறாரா?
அதனால் தான் மக்களின் மனநிலை நிக்சன் விஷயத்தில் என்ன மாதிரி இருந்திருக்கும் என்று சரியாக புரிந்து கொள்ள முடிந்த விசித்திராவால் தன்னுடைய நடவடிக்கை குறித்து மக்கள் என்ன நினைப்பார்கள் என்று சரியாக யூகிக்க முடியாமல் போய்விட்டதோ என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
ஏற்கனவே நிக்சன் மற்றும் ஐசு இருவரும் நெருங்கி பழகி வந்ததால் தான் ஐசு வெளியே போய்விட்டார் என்று விசித்திரா நிக்சனிடமே சண்டையிடும் போது கூறியிருந்த நிலையில் இப்போது பூர்ணிமாவோடு நிக்சன் கடந்த வாரத்தில் டான்ஸ் ஆடி நெருக்கமாக இருந்ததால் இந்த வாரம் போயிருக்கிறார் என்று கூறியிருப்பதால் இதை வைத்து இந்த வாரம் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications