லியோ விஜய்யை விடுங்க.. பிக் பாஸ்க்குள் அலப்பறை மன்னன் சொன்னதை கேட்டீங்களா? ரெட் கார்ட் கிடைக்குமா?
சென்னை: நேற்று நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் பிரமாண்டமாக வெளியாகி சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் விஜய் பெயரை வைத்து இருக்கும் போட்டியாளர் பேசியதற்கு சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

நடிகர் விஜய்யோடு தலைவா திரைப்படத்தில் நடித்த விஜய் சர்மா பிக் பாஸ் வீட்டிற்குள் தான் ஒரு ரவுடி போல பேசிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் அவருக்கு ரெட் கார்டு கிடைக்குமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன்களிலும் பல்வேறு சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் கடந்து தான் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஏழாவது சீசன் இப்போது சண்டை சச்சரவுகளோடு வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர் சக போட்டியாளர்களின் அட்டாக்குக்கு அசராமல் பதிலடி கொடுத்துக் கொண்டு வருவது வழக்கம்தான். ஆனால் இந்த சீசனில் அப்படி ஒருவரை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. சீசன் தொடங்கி இன்றோடு ஐந்து நாட்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் இன்னும் போகப் போகத்தான் இதைப்பற்றி உறுதியாக கூற முடியும்.
அதில் சண்டை போட்டியாளராக பிரதீப் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு போட்டியாக விஜய் சர்மாவும் இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாகவே பிரதிப்க்கும் விஜய்க்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதில் இன்று ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இவர்களுக்குள் பிரச்சனை முட்டிக்கொண்டு இருக்கிறது. அது முதல் ப்ரோமோவில் வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் பேசும்போது பிரதீப் என்னை தாண்டி போகும்போது அவருடைய ஷூவை வைத்து என்னை இடித்ததாகவும் எனக்கு கோபம் வந்தால் கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். நானும் தட்டுவேன் அதனால் அவருடைய வாய், மூக்கு எல்லாம் ஒடஞ்சிடும் என்று பேசிக் கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் வெளியே என்னை சுற்றி பாசமான பசங்க நிறைய பேரு இருக்காங்க. அவர்களை தாண்டி பிரதீப்பால் போக முடியாது என்று மிரட்டும் தோணியில் பேசி இருந்தார். இதனால் வையலன்ஸ் என்றாலே பிக் பாஸ் வீட்டிற்குள் ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விட வேண்டும். ஆனால் விஜய் பேச்சில் வையலன்ஸை ஆரம்பித்திருக்கிறார். இந்த வையலன்ஸ் நாளைக்கு செயலிலும் வெளிப்படும். அதனால் ஆரம்பத்திலேயே விஜய்க்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் கடந்த சீசனில் அசீம் சக போட்டியாளர்களிடம் இப்படித்தான் மல்லுக்கு நின்று கொண்டிருந்தார். அதனாலயே அவர் ஜெயித்துவிட்டார். அதுபோல இந்த சீசனிலும் நாமும் இப்படி திமிராக இருந்தால் தான் ரசிகர்கள் நம்மை விரும்புவார்கள் என்று நினைத்துக் கொண்டு போட்டியாளர்களில் ஒரு சிலர் போட்டி போட்டுக்கொண்டு வையலன்ஸை காட்டிக் கொண்டிருக்கின்றனர். விஜய் ஒரு பக்கம் நான் அடித்து விடுவேன் இல்லை என்றால் வெளியே ஆள் வைத்து அடிப்பேன் என்று சொல்வது போன்று பேசிக்கொண்டு இருக்க, அதற்கு விஷ்ணுவும் நான் உன்னை செருப்பால மிதிக்கிறேன் நீ என்ன அடி பார்ப்போம் என்று போட்டிக்கு போய் நிற்கிறார்.
இப்படியே போனால் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக இந்த முறை அடிதடி நடக்கும் என்பது தெரிகிறது. அதே நேரங்களில் வாய் பேச்சு கை பேச்சாக மாறுவதற்கு முன்பு பிக்பாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் பொருத்திருந்து பார்ப்போம் இந்த வாரம் இது குறித்து கமல் என்ன பேசப்போகிறார் என்பதை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications