பிக் பாஸ்7: அந்த வீட்டிற்குள் இதுதான் நடக்குது.. வெளியே தெரியல.. ரகசியத்தை லீக் செய்த விஜய் வர்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் விஜய் வர்மா எலிமினேஷன் செய்து வெளியேற்றப்பட்டார்.

bigg boss tamil season 7 vijay varma first interview

இந்த நிலையில் முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு விஜய் வர்மா பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.அதில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அப்போது உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பற்றி சில தகவல்களையும் தன்னுடைய தற்போதைய மனநிலை குறித்தும் விஜய் வர்மா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் விஜய் வர்மா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படத்தில் அவரோடு நடித்து பிரபலம் அடைந்திருந்தார். அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் விளையாடும் விதம் குறித்து பலர் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் ஒரு சில நாட்களிலேயே இவருடைய விளையாட்டு குறித்து விமர்சிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரதீப் தன் மீது காலால் இடித்துவிட்டு சென்றது குறித்து நான் அடித்து பல்லை உடைத்திருப்பேன், இல்லையென்றால் வெளியே போனாலும் என்னக்காக பல பேர் இருக்கிறார்கள் அவர்கள் இவரை சும்மா விடமாட்டார்கள் என்று மிரட்டும் தோணியில் பேசி இருந்தார்.

இதனாலேயே அவருக்கு கமல்ஹாசன் ஸ்ட்ரைக் கார்ட் கொடுத்து வார்னிங் கொடுத்து இருந்தார். அதைத்தொடர்ந்து டாஸ்க்கில் பிரதீப்பை தூக்கி அடித்தது, விஷ்ணுவின் கழுத்தில் காயப்படுத்தியது என்று இவருடைய விளையாட்டு முரட்டுத்தனமாக இருப்பதாகவே பலர் கூறி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரத்தில் இவர் அதிரடியாக எலிமினேஷன் செய்து வெளியேற்றப்பட்டார்.

இது விஜய் வர்மாவிற்கு பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. கடைசி வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் நாம் இருப்போம் என்று இருந்த நிலையில் திடீரென்று இவர் வெளியேற்றப்பட்டது குறித்து பேட்டி ஒன்றில் முதல்முறையாக பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் நான் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. எப்படி வெளியேறினேன் என்பது பற்றி தான் இப்போதும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள்ள ஸ்மார்ட்டா விளையாடுவது என்றால் கூல் சுரேஷ் தான். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நான் பார்த்த வரைக்கும் அவர்தான் இந்த விளையாட்டை சூப்பராக விளையாடி கொண்டு இருக்கிறார். அதுபோல என்னைவிட குறைவாக விளையாடுரவங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருக்காங்க.

bigg boss tamil season 7 vijay varma first interview

ஆனால் அவங்க தான் வெளியே வருவாங்கன்னு எதிர்பார்த்தேன். கடைசியில் இப்படி நடக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வீட்டிற்குள் போவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக உள்ளே போவேன் என்று அவர் கூறி இருக்கிறார். அதோடு நீங்கள் வெளியே இருந்து பார்ப்பது போன்று பிக் பாஸ் கிடையாது.

உள்ளே பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வெளியே வேறு விதமாக காட்டப்பட்டு கொண்டிருக்கிறது. பல காட்சிகள் கட் செய்து விடுவதால் முழுமையாக ரசிகர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் போய்விடுகிறது, என்று அந்த பேட்டியில் மேலும் சில தகவல்களையும் விஜய் வர்மா கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+