Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் 7: மாயாவிற்கு விஷ்ணு வைத்த செக்..ரசிகர்களின் ஆசை நிறைவேறியது.. வெளியே போகிறவர் இவர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஷ்ணு தன்னிடம் இருந்த ஸ்டாரை பயன்படுத்தி அக்ஷயா மற்றும் மாயாவை நேரடியாக நாமினேஷன் செய்திருக்கிறார்.

அதே நேரத்தில் இன்று திங்கட்கிழமை என்பதால் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்த 8 போட்டியாளர்கள் நாமினேசன் லிஸ்டில் இருக்கின்றனர்.

Bigg Boss Tamil Season 7 Vishnu has directly nominated Akshaya and Maya

அதுபோல பிக் பாஸ் இந்த முறை மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக வர இருக்கிறார்கள். அதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க்குகள் நடைபெறும் நிலையில் அதில் தோற்கும் மூன்று போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போன்று தான் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத பல மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த வரம் கேப்டன்ஸி டாஸ்கில் தினேஷ் வெற்றி பெற்றிருந்தார். தினேஷ் வெற்றி பெற்று இருந்த நேரத்தில் பிக் பாஸ் வீடு மற்றும் ஸ்மால் பாஸ் வீடு என்று வேற்றுமை இல்லாமல் எல்லாமே ஒரே வீடாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 7:Wild card ஆக வரும் அந்த மூன்று பேர் இவர்கள் தானா? இனிதான் நிக்சனுக்கு பிரச்சனையே இருக்கு
அதுபோல கடந்த வாரம் முழுக்க போட்டியாளர்களுக்கு ஸ்டார் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் ரவீனா, மணி, விசித்ரா, விஷ்ணு ஆகியோர் அதிகப்படியான ஸ்டார்களை பெற்றிருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் முழுக்க நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக இருந்த போட்டியாளர்கள் இருவரை பிக் பாஸ் தேர்ந்தெடுக்க சொல்லியிருந்தபோது போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து விசித்ரா மற்றும் அர்ச்சனாவை சுவாரசியம் குறைவான போட்டியாளர்கள் என்று தேர்ந்தெடுத்து இருந்தனர்.

ஆனால் விசித்ரா மற்றும் அர்ச்சனா எங்களை விட பிராவோ, அக்ஷயா, விக்ரம் எல்லாம் நன்றாக விளையாடினார்களா? என்று வாக்குவாதம் செய்து நாங்கள் சிறைக்குப் போக மாட்டோம் என்று தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஸ்டார் அதிகம் பெற்றிருக்கும் போட்டியாளர்கள் அவர்களுக்குள் கலந்து பேசி ஒருவருக்கு ஸ்டார் கொடுக்கலாம் அந்த ஒரு நபர் இரண்டு நபரை அடுத்த வாரம் நாமினேஷனக்கு நேரடியாக தேர்வு செய்யலாம் என்று பவர் கொடுக்கப்பட்டது.

அதன்படி மேலே சொன்ன ரவீனா, மணி, விசித்ரா, விஷ்ணு ஆகியோர் கலந்து பேசி விஷ்ணுவிற்கு பவர் கொடுக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு யாரை நாமினேஷன் செய்தார் என்று நேற்று எபிசோடில் காண்பிக்கப்படவில்லை. ஆனால் இந்த காட்சி இன்று 24 மணி நேர எபிசோட்டில் ஒளிபரப்பானது. அதில் விஷ்ணு தனக்கு கிடைத்த பவரை வைத்து மாயா மற்றும் அக்ஷயாவை நேரடியாக நாமினேட் செய்திருக்கிறார்.

மாயாவை விஷ்ணு நாமினேட் செய்ததும் அதற்கு மாயா நீங்களாக தானே இப்படி நாமினேட் செய்தீர்கள் ரவினா,மணி, விசித்திரா ஆகியோர் செய்த டீலிங் அடிப்படையில் இதை செய்யவில்லையே என்று கேள்வி எழுப்ப அதற்கு விஷ்ணு இல்லை இது என்னுடைய முடிவு என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் விஷ்ணு மாயாவை நாமினேட் செய்தது சரியான முடிவாக இருந்தாலும் அக்ஷயாவை ஏன் நாமினேட் செய்தார் என்று புரியவில்லை.

Bigg Boss Tamil Season 7 Vishnu has directly nominated Akshaya and Maya

அதற்கு பதிலாக பூர்ணிமாவை டாமினேட் செய்திருக்கலாம் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்று திங்கள் கிழமை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்காக நாமினேஷன் நடைபெற்றது. அதில் விசித்ரா, மாயா, ரவீனா, அக்ஷயா, பிராவோ, பூர்ணிமா, அர்ச்சனா, மணி முதலிய எட்டு போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.

இதில் யார் வெளியற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும் நிலையில் பிக் பாஸ் இன்று புது டாஸ்க் ஒன்று கொடுத்திருக்கிறார். அதன்படி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்க்கில் ஜெயிக்க வேண்டும். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி போன மூன்று போட்டியாளர்கள் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வர இருக்கிறார்கள்.

அப்போது டாஸ்க்கில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஜெயிக்கவில்லை என்றால் வைல்ட் கார்டு போட்டியாளர்களுக்கு வழிவிட்டு உள்ளே இருக்கும் மூன்று போட்டியாளர்கள் வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் அறிவுறுத்தி இருக்கிறார்.இந்த நிலையில் நிலையில் ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் தோற்று விட்டால் பிராவோ, அக்ஷயா இருவரும் கண்டிப்பாக இந்த வாரத்தில் வெளியேறி விடுவார்கள் என்பது பலருடைய கணிப்பாக இருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+