பிக் பாஸ்7: அர்ச்சனா தம் அடிக்கிறாங்க, அதுவும் “அந்த” மாதிரி.. கமலிடம் பஞ்சாயத்துக்கு போகும் விஷ்ணு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை அர்ச்சனா புகை பிடிக்கிறார். அதனால் தனக்கு உடல்நல பிரச்சனை ஏற்படுகிறது என்று விஷ்ணு பிரச்சனை பண்ணி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது ஒரு டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு சில போட்டியாளர்கள் உடைய கை ஒன்றாக சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

அப்போது அடிக்கடி நடிகை அர்ச்சனா புகை பிடிப்பதால் அவரோடு கை ஒன்றாக கட்டபட்டிருக்கும் தனக்கும் உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது என்று விஷ்ணு கூறியிருக்கிறார். இந்த நிலையில் நடந்தது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Tamil Season 7 Vishnu is worried that actress Archana smokes due to her health problem

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு முக்கிய போட்டியாளராக விஷ்ணு இப்போது வந்து கொண்டே இருக்கிறார். சீரியலில் இவரை அமுல் பேபி ஆக பார்த்து ரசிகர்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்கு இவர் போடும் கூச்சல் குழப்பம்
அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளரோடு சண்டையிட்டுக் வருவதே விஷ்ணுவின் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிய சண்டை அர்ச்சனோடு இன்னும் முடிவுக்கு வராத வகையில் தான் இருக்கிறது. அதிலும் இந்த வார கேப்டனுக்காக தேர்வு நடைபெற்றபோதே விஷ்ணுவின் செயல்களில் பல மாற்றம் தெரிந்தது. ஆனாலும் நிக்சன் கேப்டன் ஆனதை தொடர்ந்து விஷ்ணுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து பல இடங்களில் தன்னுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்படியாக இருக்கும் நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் காலை ஆக்டிவிட்டி டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் விஷ்ணு, வீட்டில் அஞ்சலி பாப்பா மாதிரி தெரிகிறார் என்று அர்ச்சனாவை டார்கெட் செய்து பேசியிருந்தார். ஏற்கனவே அர்ச்சனாவை தொட்டால் சிணுங்கி என்று சொன்ன பிரச்சினையையே இன்னும் அடக்கவில்லை.

அதற்குள் அஞ்சலி பாப்பா என்று சொல்லி அடுத்த பிரச்சனையை விஷ்ணு தொடங்கி இருக்கிறார். அதற்குப் பிறகு டாஸ்க் முடிந்து கிச்சனுக்கு வந்த ஸ்மால் பாக்ஸ் வீட்டினர் காலை உணவு சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது காலையில் தன்னை பற்றி பேசியது குறித்து அர்ச்சனா விஷ்ணுவுடன் கேள்வி எழுப்பினார். அப்போது விஷ்ணு கோவப்பட்டு கத்துகிறார். பதிலுக்கு அர்ச்சனாவும் விடாமல் கத்திக் கொண்டே இருக்க இவர்களுடைய சண்டையை ஹவுஸ் மேட்டுகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிக் பாஸ்7: இது என்ன தமிழுக்கு வந்த சோதனை.. ஜோவிகா எழுதிய வார்த்தை.. வனிதா கொடுத்த விளக்கம்
அந்த நேரத்தில் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விஷ்ணு கையை வீசி பளார் பளார் என்று அடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அடிங்க பாப்போம் என்று அர்ச்சனாவும் விஷ்ணு பக்கத்தில் போய் இருக்கிறார். இப்படியாக நேற்று நடந்த இந்த சம்பவம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதற்கிடையில் விஷ்ணு அர்ச்சனா புகை பிடிப்பதால் தன்னுடைய ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று நான் கமல் சாரிடம் சொல்லப் போகிறேன் என்று சக போட்டியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அது எதற்காக என்றால் நேற்றைய டாஸ்க்கில் அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு ஆகிய மூவரின் கைகளும் ஒரே கயிறில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அப்போது அர்ச்சனா அடிக்கடி புகை பிடிக்க சென்றாராம். அதனால் மீதமுள்ளவர்களும் அர்ச்சனாவோடு கூடப் போக வேண்டிய நிலைமை இருக்கிறது. அப்போது அர்ச்சனா அங்கே புகை பிடிப்பதால் தங்களுடைய ஆரோக்கியமும் கெட்டுவிடுகிறது என்று விஷ்ணு புலம்பி இருக்கிறார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அர்ச்சனா புகை பிடிக்கும் ஒரு சில புகைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தனர். நேற்றைய எபிசோடில் கூட தன்னை தன்னுடைய பெற்றோர் ரொம்பவே ஸ்ட்ரிட்டாக வளர்த்தனர். அதனால் அடிப்படையான பல விஷயங்கள் எனக்கு கிடைக்கவில்லை என்று அர்ச்சனா கதறி அழுது இருந்திருந்தார்.

இந்த நிலையில் ஒரு பெற்றோர் ஸ்ட்ரிட்டாக வளர்த்து இருந்த நிலையில் இப்படி அடுத்தவர்களோடு டாஸ்க் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களில் உடல் நலத்தை யோசிக்காமல் இப்படி புகை பிடிக்கலாமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+