தமிழ்நாட்டில் இருக்கவே உனக்கு தகுதி இல்லை! விசித்திராவை விமர்சித்த கூல் சுரேஷ்.. காரணமே இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்று எபிசோட் நடைபெற்றது.
அதில் தன்னை நாமே ரிசர்வ் செய்த விசித்திராவை கூல் சுரேஷ் தமிழ்நாட்டில் இருக்கவே உனக்கு தகுதி இல்லை என்று சொல்லி நாமினேஷன் செய்திருந்தார்.
இந்த நிலையில் கூல் சுரேஷ் இவ்வளவு கோபமாக விசித்திராவை பற்றி பேசுவதற்கு என்ன காரணம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இதுவரைக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் அமைதியின் சொரூபமாக இருந்த கூல் சுரேஷ் நேற்று சூறாவளியாக மாறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். இதுவரைக்கும் கமல்ஹாசன் முன்னாடி கூட நான் எந்த பிரச்சனையிலும் தலையிட மாட்டேன், ஒதுங்கி நின்று கொள்வேன். ஏதாவது பிரச்சனை நடக்கும் இடத்தில் நம்ம கூட இருந்தால் நாமும் அங்கே பேச வேண்டும், பிறகு அவமானப்பட வேண்டும். அது எதற்கு? அதனால் நான் தனியாகவே இருந்து கொள்கிறேன் என்று பேசி இருந்தார்.
ஆனால் தனக்கு எப்பவாவது பிரச்சனை வருகிறது என்றால் அங்கு கூல் சுரேஷ் பதிலடி கொடுக்க தவறவில்லை. அதுவும் போட்டியாளர்களுக்கு கையில் கயிறு கட்டி டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தபோது அது குறித்து கமல் விசாரிக்க போது கூல் சுரேஷ் விசித்திராவை பற்றி பல தகவல்களை போட்டு உடைத்து இருந்தார். அதற்கு பிறகு விசித்ரா மற்றும் கூல் சுரேஷ் இடையே அடிக்கடி பிரச்சனை முட்டி மோதிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு ஓபன் நாமினேஷன் நடைபெற்றது.
அதில் கூல் சுரேஷ்க்கு அவருடைய குடும்பம் ஞாபகமாக இருக்கிறது. அதனால் அவரை நாமினேஷன் செய்கிறேன். அவர் வெளியே போனால் சந்தோஷமாக இருப்பார் என்று விசித்திரா பேசியிருந்தார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கூல் சுரேஷ் அவருடைய டைம் வந்தபோது விசித்திராவை நாமினேஷன் செய்கிறேன் என்று சொன்ன கூல் சுரேஷ், விசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கவே உனக்கு தகுதி இல்லை என்றும் அம்மா அம்மா என்று சொல்லி ஏமாத்தறீங்க.
நேத்து நைட்டு சும்மா போனவனை கூப்பிட்டு உன் கதையை சொல்லு என்று பாவம் படுவது போல பேச அதனால் தான் நான் என்னுடைய கதையை சொன்னேன். ஆனால் இப்போது அதை வைத்து என்னை நாமினேஷன் செய்திருக்கிறார். இது எந்த வகையில் நியாயம். இதற்கு பெயர் பச்சோந்தி தனம் என்றும், விசித்திரா ஒரு சரியான பச்சோந்தி என்று தன்னுடைய மனதில் இருந்த மொத்த பாரத்தையும் இறக்கி வைக்கும் வகையாக மொத்தமாக கொட்டி தீர்த்து விசித்திராவிற்கு எதிராக தனது குரலை பதிவு செய்திருந்தார்.
இந்த சீசனில் போட்டியாளராக உள்ளே நுழைந்த கூல் சுரேஷ் சில வாரங்கள் கூட தாக்கு பிடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர் 60 நாட்களைக் கடந்து வீட்டுக்குள் இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்திருக்கிற கூல் சுரேஷ் இந்த வாரத்தை கடப்பாரா? அல்லது விசித்திராவை எதிர்த்து பேசியதால் வெளிய அனுப்பப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications