அதுக்காக நான் ஆபரேஷனா செய்ய வேண்டும்? கொந்தளித்த அர்ச்சனா.. ரவீனா சொன்ன வார்த்தையால் வந்த வினை
சென்னை:( பிக் பாஸ் 7 லைவ்) பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று புது டாஸ்க் நடைபெற்று இருக்கிறது. அப்போது ரவீனா அர்ச்சனாவை பற்றி சொன்ன வார்த்தையால் அர்ச்சனா கோவத்தில் இருக்கிறார்.
இன்று டாஸ்க் ஒன்றில் அர்ச்சனா ஜெயித்திருந்த நிலையில் அதனால் சத்தமாக தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்த அதற்கு ரவீனா எதற்காக இப்படி கத்துறீங்க என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதனால் கோபமான அர்ச்சனா என்னுடைய குரல் இப்படித்தான் இருக்கிறது. அதற்காக நான் ஆப்ரேஷனா செய்ய வேண்டும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் எப்போது என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது. இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்கிற மாதிரி தான் இன்றைய 75 வது நாள் எபிசோட்டை எல்லோரும் இனிமையோடு கொண்டாடி இருந்தனர்.
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இனிப்பை கொடுத்து அடுத்ததாக அவர்களுக்குள் பிரச்சனையையும் பற்ற வைத்திருக்கிறார். பிரச்சனைகள் இருந்தால் தானே பிக் பாஸ் என்று ஒரு நிகழ்ச்சி நடப்பதை எல்லோருக்கும் தெரியும் என்பதை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க் வைத்து போட்டியாளர்களுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்துவது பிக்பாஸில் வழக்கமாக இருக்கிறது..
அந்த வகையில் நேற்று டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்றது. அப்போது எல்லோருக்கும் பாசிட்டிவான கேரக்டரை கொடுத்து பிக்பாஸ். அர்ச்சனாவுக்கு மட்டும் நெகட்டிவ் கேரக்டரை கொடுத்திருந்தார். அதை புரிந்து கொண்டு ஆரம்பத்தில் அழுத அர்ச்சனா பிறகு பிக் பாஸ் சொன்ன சமாதானத்தை கேட்டு தன்னுடைய பெஸ்ட் கொடுத்து அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட போகும் மாற்றம் இந்த இடத்திலிருந்து நீங்கள் என்னவாக மாற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று பிக் பாஸ் கேட்க அதற்கு பலரும் தங்களது கருத்துக்களை கூறிக் கொண்டிருந்தனர். அதை தொடர்ந்து இன்று புது டாஸ்க் ஒன்று நடைபெற்றது. அதில் Domex பாத்ரூம் கிளீனர் மூலமாக போட்டியாளர்களுக்குள் இரண்டு அணியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு டாஸ்க் வழங்கப்பட்டிருக்கிறது.
அதில் ஜெயிக்கிறவர்களுக்கு ஒரு வருடத்திற்கான டோமஸ்( Domex) சப்ளை கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் கிருமியாக நிக்ஸன் இருந்திருக்கிறார். இந்த டாஸ்க்கில் ஒரு டீம் ஜெயித்திருக்கிறார்கள். அதில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றால் அர்ச்சனா, ரவீனா, விஷ்ணு, விக்ரம், விசித்திரா, பூர்ணிமா, விஜய் எல்லாரும் ஜெயித்திருக்கிறார்கள்.
அதனால் இவர்கள் எல்லோரும் ஜெயித்ததை சந்தோஷமாக கத்தி கொண்டாடி இருக்கின்றனர். அப்போது அர்ச்சனா போட்ட சவுண்டை கேட்டு கடுப்பான ரவீனா எதற்காக இப்படி கத்துறீங்க என்று கேட்க, இதைக் கேட்டு அர்ச்சனா கோபமாகி இருக்கிறார். நீ இந்த மாதிரி ஒரு முறை இல்ல பலமுறை என்னை எப்போதும் இன்சல்ட் பண்ற, என்னுடைய குரல் அப்படித்தான் இருக்கிறது.
நீயும் தான் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிற, அதுக்காக நான் உன்னை குறை சொல்லிக் கொண்டே இருந்தா உனக்கு ஓகேவா? அதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? என்னுடைய குரல் இப்படித்தான் இருக்கிறது. உனக்காக நான் அதை ஆபரேஷன் செய்யவா முடியும்? என்று கோபமாக பேச, இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு விடுகிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் சிலர் சமாதானம் படுத்த பார்க்க அர்ச்சனா மேலும் மேலும் தான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த வார தலைவராக இருக்கும் மணி வந்து இவர்கள் இருவரையும் பேச வைக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் இவர்கள் இருவரும் இன்னமும் வீம்பு பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்று என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications