பிக் பாஸ் 8: சாப்பாடு விஷயத்தில் முத்துக்குமரன் செய்த செயல் அம்பலமானது.. அன்ஷிதா கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நவம்பர் 11ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சாப்பாடு விஷயத்திற்கு முத்துக்குமரன் செய்த செயல் குறும்படம் மூலமாக அம்பலமாகி இருக்கிறது. இதனால் அன்ஷிதா கோபப்பட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்ஷிதா மற்றும் முத்துக்குமரன் இருவரும் ஏற்கனவே சண்டை போட்ட ஆடியோ இப்ப வரைக்கும் ரீல்ஸ்களில் பலர் டப்ஸ்மாஷ் செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல இப்போது அடுத்த ஒரு பிரச்சனை இன்று வெடித்திருக்கிறது. அதாவது இந்த வாரத்தில் ஆண்கள் அணியில் பெண்கள் சார்பாக அன்ஷிதா அனுப்பப்பட்டு இருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் ஆண்கள் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் நேரத்தில் அன்ஷிதா பெண்களோடு கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென்று உள்ளே ஆண்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அன்ஷிதா சாப்பிடுவதற்காக ஓடி வருகிறார்.

ஆனால் எப்போதும் தங்கள் அணிக்கு வரும் பெண் போட்டியாளருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கும் ஆண்கள் இன்று மறந்தது போல இருக்கிறது. ஒரு கிண்ணத்தில் கூட்டு எடுத்து வைக்காமல் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்ஷிதா வருவதை பார்த்ததும் அவசர அவசரமாக முத்துக்குமரன் தன்னுடைய தட்டில் இருந்த காய்கறி கூட்டை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுகிறார்.

அங்கு வந்த அன்ஷிதா நீங்கள் எல்லாரும் என்னை மறந்துட்டீங்க தானே? எல்லாரும் சாப்பிட உட்கார்ந்துட்டீங்களே என்று கேட்க, அதற்கு முத்துக்குமரன் நாங்கள் 10 பவுலில் கூட்டு எடுத்து வைத்திருந்தோம், உனக்கும் சேர்த்து தான் எடுத்து வைத்திருந்தோம் என்று சொல்ல அதற்கு அன்ஷிதா இல்லை இது நீ தட்டில் இருந்து எடுத்து வச்சிருக்க, இதை என்னிடம் உண்மையை சொன்னால் கூட நான் சரின்னு சொல்லி இருப்பேன் ஆனா பொய் சொல்ற என்று சொல்கிறார்.

முத்துக்குமரன் தட்டில் இருந்து கூட்டு எடுத்து வைத்த காட்சிகள் எல்லாம் இன்று குறும்படமாக ப்ரோமோவில் இருக்கிறது. ஆனாலும் முத்துக்குமரன் தான் மறந்து விட்டோம் என்பதை சொல்லாமல் சமாளிக்க பார்க்கிறார். அதனால் அன்ஷிதா கோபமாகி இன்னைக்கு நான் உங்கள் அணியில் இருக்கிறேன் என்னை மறந்துட்டு நீங்க சாப்பிட உட்கார்ந்துட்டீங்க அதனால் நான் சாப்பிடவில்லை.

நான் இன்னைக்கு சாப்பிட்டா நீங்க நாளைக்கு மறந்திடுவீங்க, நான் இன்னைக்கு சாப்பிடாம இருந்தா நாளைக்கு மறக்காம எனக்கு சாப்பாடு எடுத்து வைப்பீங்க என்று போர்க்கொடி தூக்கி உண்ணாவிரதம் இருக்கிறார். இது பெரிய பிரச்சனை ஆகும் என்று தெரிகிறது. வழக்கம் போல இதை வைத்து இனி ஒரு பஞ்சாயத்து நடக்குமா? அல்லது அன்ஷிதாவை யாரேனும் சாப்பிட வைக்க போகிறார்களா என்று தெரியவில்லை.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஏற்கனவே நேற்றைய எபிசோடில் அன்ஷிதாவின் தோழியாக இருந்த சுனிதா வெளியே சென்றது அன்ஷிதாவை ரொம்பவே வருத்தத்தில் ஆழ்த்தி இருந்தது. இரவு முழுக்க அன்ஷிதா அழுது கொண்டே இருந்தார். இன்று காலையில் ஆண்கள் அணிக்கு யார் செல்லலாம் என்ற வாக்கெடுப்பு நடந்தது.

அப்போது வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த வர்ஷினி, நாங்கள் ஆண்கள் வீட்டிற்கு சென்றால் காணாமல் போய்விடுவோம்.. இத்தனை வாரங்கள் இந்த வீட்டில் இருந்த ஜாக்லின் போனவாரம் ஆண்கள் அணிக்கு போன போது அவர் காணாமல் போய்விட்டார். இந்த நேரத்தில் நாங்கள் யாரேனும் அங்கே போனால் மக்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாது.

ஏற்கனவே நாங்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறோம் அதனால் போக மாட்டோம் என்று சொல்லி இருந்தனர். இதனால் தான் அன்ஷிதா அங்கே சென்றிருப்பார் என்று தெரிகிறது. அன்ஷிதா ஆண்கள் வீட்டிற்கு போனாலும் இன்று சாப்பாடு பிரச்சனையை வைத்து பஞ்சாயத்து கூட்டி இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+