பிக் பாஸ் 8: குனிஞ்சு போயிட்டா மேல தெரியவே மாட்டோம்! எனக்கும் பிரியங்காவுக்கும் சண்டை.. தாமரை பளிச்
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி நாளை தொடங்க இருக்கிறது. அதற்கு முன்பு "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்ற பெயரில் பிக் பாஸின் பழைய போட்டியாளர்கள் கலந்து கொள்ள, அவர்களிடம் பிக் பாஸ் பற்றிய சந்தேகங்களை பொதுமக்கள் கேட்கிறார்கள். இதற்குரிய ப்ரோமோ இப்போது அடுத்தடுத்து வெளியாகி இருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை "அக்டோபர் 6ம் தேதி" பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகம் ஆகி இருக்கிறார். இவருடைய பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி பற்றி மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் கேள்விகளுக்கு விடை கொடுக்கும் வகையில் விஜய் டிவி புது நிகழ்ச்சி ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.

அதாவது நாளை மாலை 6:30 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதற்கு முன்பு ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி, தாமரை செல்வி,
வனிதா, சனம் ஷெட்டி, ஆர்த்தி, தனலட்சுமி அமுதவாணன் உட்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் பொதுமக்கள் பிக் பாஸ் பற்றிய சந்தேகங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது ஒரு ரசிகர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் ஒருவர் எதிர்த்து நின்று கேள்வி கேட்டாலும் உடனே அந்த வாரமே அவரை எலிமினேஷன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீங்க ஏன் என்று கேள்வி கேட்க, அதற்கு தாமரை செல்வி பதில் அளித்திருக்கிறார். அதில் நம்மை ஒருவர் தலையில் அடிச்சு காலி பண்ணனும் என்று நினைக்கையில நாம அப்படியே குனிஞ்சி போயிட்டோம்னா நாம மேல தெரியவே மாட்டோம்.

எனக்கும் பிரியங்காவுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிகமா சண்டை நடந்தது. ஆனால் வெளியே வந்த பிறகு நீ இந்த இடத்திற்கு வந்தது ரொம்ப சந்தோசம் என்று இன்னவரைக்கும் அவள் எனக்கு மெசேஜ் போட்டுகிட்டு இருக்கா என்று சொல்ல அதற்கு தொகுப்பாளராக இருக்கும் குரேஷி அப்போ நீங்க ஒரு வீடியோ போட்டு இருக்கலாமே என்று இதில் மணிமேகலை பிரச்சனையை இழுத்து பேசுகிறார்.

இந்த ப்ரோமோ இப்போது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றிய ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதில் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் இது பிரியங்காவை பிரபலப்படுத்துவதற்காகவும் அவருக்கு சப்போர்ட் செய்வதற்காக தான் இந்த நிகழ்ச்சி நடந்தது போல தெரிகிறது. ஏற்கனவே மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சனை இப்போதுதான் அமைதியாக இருக்கிறது. இந்த நேரத்தில் எதற்கு பிரியங்காவை பெருமையாக பேசுவது ஒரு ப்ரோமோவில் காட்ட வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications