பிக் பாஸ் 8: நள்ளிரவில் கேமரா முன்பு அருண் பேசிய வார்த்தை.. அப்போ அர்ச்சனா என்ட்ரியா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அருண் பிரசாத் நேற்று இரவு தன்னுடைய காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருந்தார். நேற்று அர்ச்சனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். அதுபோல அருண் லைவில் பேசிய பிறகு தன்னுடைய பிறந்தநாள் இப்போதுதான் முழுமை அடைந்திருக்கிறது என்று அர்ச்சனா ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற அர்ச்சனாவும் நடிகர் அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாக கடந்த சீசனில் கிசுகிசுப்பு எழுந்தது. ஆனால் பேட்டிகளில் அர்ச்சனா மற்றும் அருண் பிரசாத் இருவரும் தங்களுடைய காதலை இன்னும் வெளிப்படையாக சொல்லவில்லை.

நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தனர். அர்ச்சனா ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது அருண் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இருவரும் விஜய் டிவியில் நடித்துக் கொண்டிருந்ததால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு காதல் உருவானதாக கூறப்பட்டது. ஆனால் அதை எந்த இடத்திலும் இவர்கள் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் அருண் கலந்து கொண்டிருக்கும்போது முதல் இரண்டு வாரம் விஜய் சேதுபதி அருணை பேச விடாமல் கலாய்த்து உட்கார வைத்திருந்தார். இதனால் கோபமான அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் அருணுக்கு நீதி வேண்டும் என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார்.
அதற்குப் பிறகு இரண்டு வாரங்களாக விஜய் சேதுபதி அருணிடம் உங்களை ஏதாவது சொன்னால் வெளியே இருக்கும் உங்களுடைய ஃப்ரெண்ட் கோபிச்சிக்கிறாங்க என்று சொல்லி இருக்கிறார். அதோடு கடந்த வாரத்தில் கதை சொல்லும் டாஸ்க்கில் அருண் தன்னுடைய காதல் பற்றி பேசியதற்கு கூட விஜய் சேதுபதி வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார்.
இப்படியான நிலையில் நேற்று அர்ச்சனாவின் பிறந்தநாள் அதே நேரத்தில் நேற்று இரவு லைவில் அருண் கேமரா முன்பு பேசி இருந்தார். அப்போது, ஹாய் ஹார்லி.. நீ நல்லா இருக்கேன்னு நம்புறேன். நான் நல்லா இருக்கிறேன். இந்த வாரம் கேப்டனாக மாறி இருக்கிறேன். இன்னைக்கு உன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எப்போதும் நீ சந்தோஷமா இருக்கணும். மிக விரைவில் கப்புடன் வந்து உன்னை சந்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை பார்த்துக்கொள் ஐ லவ் யூ பாய்.. என்று பேசி இருந்தார். ஆனால் எந்த இடத்திலும் அர்ச்சனா என்று பெயரை சொல்லவில்லை என்றாலும் அர்ச்சனா இந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு இப்போதுதான் நான் என்னுடைய பிறந்த நாளை முழுமையாக கொண்டாடுகிறேன் என்றும் கீழே கேப்டன் என்றும் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இதனால் இந்த சீசனில் உறவினர்களின் என்ட்ரி வரும்போது அருணுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா என்ட்ரி இருக்குமா என்ற கேள்விகளும் எழுகிறது. இதுவரைக்கும் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக சொல்லாமல் இருக்கும் நிலையில் அந்த நிகழ்வின் போது சொல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications