சௌந்தர்யாவிடம் நீ மன்னிப்பு கேட்கணும்! விஷாலிடம் பாக்கியலட்சுமி சீரியல் நேகா கறார்.. செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் டிசம்பர் 27 ஆம் தேதிக்கான எபிசோடில் கெஸ்ட் ஆக பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நேகா கலந்து கொண்டிருக்கிறார். அவர் விஜே விஷால் இடம் நீ சௌந்தர்யாவிடம் மன்னிப்பு கேட்கணும் என்று கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் பல எதிர்பார்க்காத சம்பவங்கள் நடைபெறுகிறது. இதுவரைக்கும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொள்வார்கள். ஆனால் இப்போது போட்டியாளர்களின் காதலர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவின் காதலரான நடிகர் விஷ்ணு கலந்து கொண்டார். விஷ்ணு ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி நாள் வரைக்கும் இருந்தவர்தான் அதுபோல அதே பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஜெயித்த அர்ச்சனா அருணுக்காக இந்த சீசனில் கலந்து கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து இரண்டு ப்ரோமோவிலும் போட்டியாளர்களின் காதலர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் நாங்கள் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த போட்டியாளர்கள் சிலர் சொல்லியிருந்தனர். ஆனால் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இதைத் தொடர்ந்து இன்னொரு சம்பவமும் இன்று 24 மணி நேர எபிசோடில் நடந்திருக்கிறது. அதாவது விஜே விஷாலுக்காக பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நேகா கலந்து கொண்டிருக்கிறார். விஷால் ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜே விஷால் கலந்து கொள்கிறார் என்ற போது அவருக்கு நேகா ஆதரவு கொடுக்க தொடங்கி இருந்தார். ஆரம்பத்தில் இருந்து அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விஜே விஷாலுக்கு சில அட்வைஸ் கொடுத்திருக்கிறார். உள்ளே சென்றதும் எல்லா போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

பிறகு விஷாலை தனியாக கூப்பிட்டு சென்று உனக்கு ஒரு அறிவுரை கொடுக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு விஷால் என்னவென்று கேட்கிறார். அதற்கு நேகா, உன்னிடம் விஜய் சேதுபதி சார் ஒரு விஷயத்தை சொன்னார் அதற்கு நீ உண்மையாக மன்னிப்பு கேட்டியா? என்று கேட்க, அதற்கு நான் சௌந்தர்யாவை பற்றி தவறாக பேசியது தானே... சௌந்தர்யா எல்லா ஆண்களையும் தொட்டு பேசுவது குறித்து நான் பேசியதற்கு தானே சார் மன்னிப்பு கேட்க சொன்னார் நானும் மன்னிப்பு கேட்டுட்டேன் என்று விஷால் சொல்கிறார்.

அதற்கு நேகா நீ மன்னிப்பு கேட்டது சத்யாவிற்கும் சௌந்தர்யாவிற்கும் சண்டை நடக்கும் போது நீ பேசியதற்காக மன்னிப்பு கேட்டது போலத்தான் நீ கேட்டாய். நீ இதுவரைக்கும் இந்த விஷயத்திற்காக தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று சௌந்தர்யாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவில்லையே? நீ அப்படி கேட்டால் தானே மக்களுக்கு நீ இதற்கு தான் மன்னிப்பு கேட்கிறாய் என்று தெரிந்திருக்கும் என்று கேட்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதற்கு விஷால் முதலில் மழுப்பலாக பதில் சொல்கிறார். நான் இனி மன்னிப்பு கேட்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். மேலும் பேசிய நேகா, தர்ஷிகாவிடம் நீ நடந்து கொண்ட விதம் சரியில்ல. அவங்க உன்னிடம் என்ன அர்த்தத்தில் பழகுறாங்க என்று உனக்கு தெரியும் தானே? அப்போ நீ அதை அப்பவே தடுத்து இருக்க வேண்டாமா என்று கேட்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதற்கு விஷால் நான் தர்ஷிகாவிடம் ஒரு நல்ல பிரண்டாக தான் பழகினேன். ஆனால் அவரிடம் இருந்து வேற மாதிரி எனக்கு ஒரு அன்பு வருவது என்று புரிந்தது. ஆனால் அதற்கான இடம் இது இல்லை என்று நான் தர்ஷிகாவிடம் சொல்லி இருக்கிறேன் என்று விஷால் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் நேகா விடாமல் விஷாலிடம் துருவி துருவி கேள்வி கேட்டு அவர் பற்றி வெளியே ரசிகர்களுக்கு இருக்கும் தவறான கருத்தை புரிய வைத்து இருக்கிறார். இனி அடுத்த வாரத்தில் விஷாலின் விளையாட்டு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

television bigg boss tamil 8 bigg boss 8 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+