பிக் பாஸ் 8: நான் ஆம்பளை யாரையும் விட மாட்டேன், திமிரா பேசிய அர்னாவ்.. கோபப்பட்ட விஜய் சேதுபதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகர் அர்னாவ் கலந்து கொண்டிருக்கிறார். அவர் நிகழ்ச்சியின் தொடக்க மேடையில் விஜய் சேதுபதியிடம், நான் ஆம்பள இந்த நிகழ்ச்சியில் எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்த்து நிற்பேன் என்று பேச அதற்கு விஜய் சேதுபதி திட்டி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அர்னாவ் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் உடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இணையத்தில் பெரிய அளவில் பிரபலமானார். காதலித்து திருமணம் செய்த திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருக்கும் போது அர்னாவ் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துவதாக திவ்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்த நிலையில் அர்னாவ் ஜெயிலுக்கு சென்று விட்டு ஜாமினில் வெளியே வந்திருந்தார்.

பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அவரும் கலந்து கொண்டிருக்கிறார். அவர் மேடையில் விஜய் சேதுபதி முன்பு பேசும்போது என்னுடைய குடும்பத்தில் அம்மா, அப்பா 3 தங்கைகள் இருக்கின்றனர். ஆனால் எல்லோரும் இருந்தும் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து ஹாஸ்டலில் தங்கி டான்ஸ் படித்து வருகிறேன்.
என்னுடைய குடும்பத்தினர் என் மீது அதிகமான பாசமாக இருந்தனர். ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் எல்லோரும் என்னை விட்டு விலகி விட்டார்கள். இப்போது நான் தனியாக இருக்கிறேன் என்னுடைய நண்பர்கள் தான் எனக்கு துணையாக இருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த நிலையில் எனக்கு நண்பர்கள்தான் சப்போர்ட்டாக இருந்தார்கள் என்று சென்டிமென்டாக முதலில் பேசி இருந்தார்.
அப்போது விஜய் சேதுபதி அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களுடைய விளையாட்டை எப்படி விளையாடப் போகிறீர்கள் என்று கேட்க, நான் எதற்கும் துணிந்து தான் வந்திருக்கிறேன். என்ன வேண்டும் என்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். யாரிடமும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நாம ஒரு ஆம்பளையா இருந்துட்டு எதிலும் தோர்த்தா அசிங்கமாயிடும் என்று சொல்ல அதைக் கேட்டு டக்கு என்று கோபப்பட்டு விஜய் சேதுபதி என்ன சார் பேசுறீங்க? ஆம்பள, பொம்பள என்று பேசுறீங்க என்று கேட்கிறார்.
அதற்கு அர்னாவ் நான் தப்பா சொல்லல, பிக்பாஸ் வீட்டுக்குள்ள பல தரப்பட்டோர் இருப்பாங்க அவர்களோடு எனக்கு பிரச்சனை வந்தா நான் தைரியமாய் இருப்பேன். இதற்கும் பின் வாங்க மாட்டேன் என்று தான் சொல்ல வந்தேன் என்று சமாளித்து இருக்கிறார். பிறகு விஜய் சேதுபதி இடம் எனக்கு ஒரு முத்தம் தாங்க சார் நான் பல வருஷமா அதற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன். இத்தனை நாட்களாக முத்தம் தரும் இடத்தில் நீங்களும் இல்லை அதை வாங்கும் இடத்தில் நானும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க அதற்கு விஜய் சேதுபதி நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், உங்களுக்கு எதிரி உங்க வாய்தான் உங்க வாயால்தான் உங்களுக்கு பிரச்சனை வரப்போகிறது என்று வார்னிங் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications