பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வீடியோ வெளியிட்ட நடிகர்! இணையத்தில் கசிந்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகர் சத்யா தான் பிக் பாஸ் வீட்டிற்குள் விதிகளை மீறி செல்போன் கொண்டு வந்ததாகவும், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அடிக்கடி அப்டேட் தரேன் என்று வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 106 நாட்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும், அவர்கள் வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுடன் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக தான் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள். அதிலும் முக்கியமாக போட்டியாளர்கள் செல்போன், டிவி, செய்தித்தாள் போன்றவற்றை பயன்படுத்த முடியாது என்பது முக்கிய விதியாக இருக்கிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் சத்யா தான் பிக் பாஸ் வீட்டிற்குள் விதிகளை மீறி செல்போன் கொண்டு வந்ததாகவும், அங்கிருந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கிறேன் என்று வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்ததும் இது உண்மையா அல்லது பொய்யா என்ற குழப்பத்தோடு ரசிகர்கள் இருக்கும் நிலையில் இது முழுக்க முழுக்க பொய் என்பதே தெரிகிறது.

பிக் பாஸ் 8: சாச்சனாவை தொடர்ந்து வெளியே போகும் 2வது போட்டியாளர் இவரா? ஆரம்பமே அதகளம்!
அதாவது சத்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே இந்த வீடியோவை எடுத்து தன்னுடைய அட்மினிடம் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் நேற்று இந்த வீடியோவை சத்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அவருடைய ஒரிஜினல் இன்ஸ்டாகிராம் ஐடியில் இந்த வீடியோ இருக்கும் போதே பலருக்கும் தெரிந்திருக்கும் இது பிராங்க் வீடியோ என்று, ஆனால் சிலர் இது உண்மை என்பது போலவே பில்டப் செய்து போஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் சத்யா விஜய் டிவியில் பனிவிழும் மலர்வனம் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். அதுபோல ஜீ தமிழில் அண்ணா சீரியலிலும் நடித்திருந்தார். அண்ணா சீரியலில் முதலில் வில்லனாக வந்த இவர் இப்போது மனம் திரும்பி இருக்கிறார். ஆனால் இவர் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய் விட்டதால் இனி அந்த சீரியலில் இவருக்கு பதில் யார் வரப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது.

ஏற்கனவே சத்யா ஹாட்ஸ்டாரில் வெளியான கனா காணும் காலங்கள் சீரியலிலும் ஸ்ட்ரிக்டான வாத்தியாராக நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் இவருடைய விளையாட்டு இப்போதைக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவருடைய instagram பக்கத்தில் பகிரப்பட்ட அவருடைய வீடியோ இப்போது அதிகமான கமெண்ட்களை பற்றி வருகிறது.

நடிகர் சத்யாவின் மனைவி என்.எஸ்.கே ரம்யா ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான். பாடகியான ரம்யாவின் கணவர் சத்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன்பே பல ஏற்பாடுகளை சென்று செய்து விட்டு தான் போயிருக்கிறார். தான் நிகழ்ச்சிக்கு போனாலும் தன்னை பற்றி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று இவர் எடுத்திருக்கும் முயற்சி வெற்றி பெற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+