பிக் பாஸ் 8: சாச்சனாவை தொடர்ந்து வெளியே போகும் 2வது போட்டியாளர் இவரா? ஆரம்பமே அதகளம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியாளராக சாச்சனா நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் அவரை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளர் வெளியேற இருக்கிறார்.

ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பை விடவும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி மேனேஜ் செய்ய போகிறார் என்று எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை முதல் நாள் நிகழ்ச்சியிலேயே விஜய் சேதுபதி நிறைவேற்ற தொடங்கி விட்டார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

எந்த இடத்தில் அன்பாக பேச வேண்டுமோ அந்த இடத்தில் அன்பாகவும், எந்த இடத்தில் முகத்துக்கு நேராக தன்னுடைய கோபத்தை காட்ட வேண்டுமோ அதையும் நான் காட்டுவேன் என்று அவர் சொல்லாமல் செய்து காட்டியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதும் வழக்கம் போல இந்த சீசனிலும் விமர்சனங்கள் எழுந்து விட்டது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்ற வேண்டும் என்று பிக் பாஸ் ரூல்ஸ் போட்டு இருக்கிறார்.

24 மணி நேரத்தில் வெளியேற்றம் எந்த வகையில் நியாயம் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. பல கனவுகளோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சிக்கு வந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றால் எதற்காக ஒரு போட்டியாளரை பிக் பாஸ் அணியினர்கள் தேர்வு செய்தார்கள்? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.

நிகழ்ச்சியின் டிஆர்பிக்காக பல விஷயங்கள் மாற்றம் செய்வது வழக்கம்தான் அதிலும் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருக்கும் நிலையில் அதை பற்றி மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்று விஜய் டிவி எடுத்த முடிவு இப்போது வெற்றிகரமாகவும் மாறிவிட்டது. அதே நேரத்தில் முதல் நாளில் சாச்சனா வெளியேற்றப்பட்டது போலவே முதல் வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிறார். அதற்கான நாமினேஷனும் நடைபெற்று இருக்கிறது.

தற்போது இருக்கும் 17 போட்டியாளர்களில் சௌந்தர்யா, அருண் பிரசாத், ரவீந்தர், ரஞ்சித், முத்துக்குமார் மற்றும் ஜாக்குலின் ஆகிய ஆறு பேர் சிக்கி இருக்கிறார்கள். இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்பது மக்கள் கையில் தான் இருக்கிறது. அதே நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே ரவீந்தர் டாஸ்க் விளையாடும் போது அவருக்கு காலில் அடிபட்டு இருக்கிறது.

அதனால் ரவீந்தர் உடல் நிலைமையை காரணம் காட்டி வெளியேறப் போகிறாரா அல்லது மக்கள் தீர்ப்புப்படி மேலே சொன்ன 6 போட்டியாளர்களில் ஒருவர் வெளியேறப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+